இந்தியா
பாரத் பே நிறுவனரின் புதிய கிரிக்கெட் ஆப்.. ஐபிஎல் நேரத்தில் ரிலீஸ் செய்த புத்திசாலித்தனம்..!

இந்தியாவில் கிரிக்கெட் விளையாட்டு என்பது ஒரு விளையாட்டாக பார்க்கப்படுவதில்லை என்பதும் அது ஒரு திருவிழாவாக பார்க்கப்படுகிறது என்பதன் தெரிந்ததே. கிரிக்கெட் விளையாட தெரிந்த ஒவ்வொருவரும் இந்திய அணிக்காக விளையாட வேண்டும் என்ற கனவில் இருந்தாலும் 100 கோடி மக்களில் 11 பேர்களுக்கு மட்டுமே அந்த வாய்ப்பு கிடைக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஆனால் இந்திய அணியில் விளையாட விட்டாலும் தாங்கள் இந்திய அணியில் விளையாடுவது போல் ஒரு கற்பனை செய்து கொண்டு பலர் கிரிக்கெட் விளையாட்டை செயலியில் விளையாடி வருகின்றனர் என்பதும் ஒரு மிகச்சிறந்த பொழுதுபோக்காக அது உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஏற்கனவே கிரிக்கெட் விளையாட்டு சம்பந்தப்பட்ட சம்பந்தப்பட்ட ட்ரீம் 11, மொபைல் பிரிமியர் லீக் மற்றும் கேம் 24×7 போன்ற செயல்கள் உள்ளன என்பதும் இந்த செயலிகளுக்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் பாரத் பே நிறுவனர் அஷ்னீர் குரோவர் என்பவர் புதிய கிரிக்கெட் செயலியை அறிமுகம் செய்துள்ளார். கிரிக்பே என்று அழைக்கப்படும் இந்த செயலி கிரிக்கெட் விளையாட்டில் மிகப்பெரிய புரட்சியை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அடுத்த வாரம் ஐபிஎல் போட்டிகள் தொடங்க இருக்கும் நிலையில் மிக சரியான நேரத்தில் அவர் இந்த செயலியை அறிமுகப்படுத்தி இருக்கிறார் என்று கூறப்படுகிறது. கிரிக்கெட் வீரர்களுக்கு செயல் திறனுக்கு பணம் கொடுக்கும் கற்பனை விளையாட்டு என்றும் நீங்கள் வெற்றி பெறும் நேரத்தில் ஒரு கிரிக்கெட் வீரர் வெற்றி பெறுகிறார் என்றும் அஷ்னீர் குரோவர் தனது டுவிடட்ர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இந்தியாவில் உருவாக்க உருவாக்கப்பட்ட ஒரு தனித்துவமான செயலி என்றும் இதில் ஒவ்வொரு நாளும் வெற்றி கிடைக்கும் போது உங்களுக்கு வெகுமதியும் கிடைக்கும் என்றும் உண்மையான கிரிக்கெட் வீரர்கள் விளையாடுவது இந்த விளையாட்டை நீங்கள் விளையாடலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.
CRICKPE !
Biggest revolution in Cricket since IPL – only fantasy game paying cricketers for performance !
Where you win – cricketer wins – cricket wins !!https://t.co/virVGj27DThttps://t.co/Jl0mu4lFXO@crickpe_app pic.twitter.com/uQuxXEnk4c
— Ashneer Grover (@Ashneer_Grover) March 23, 2023
இது ஒரு பொழுதுபோக்கு விளையாட்டு மட்டுமின்றி பண வெகுமதியும் வெல்லும் ஒரு செயலி என்பதால் ஏராளமானோர் இந்த செயலியை டவுன்லோட் செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கூகுள் பிளே ஸ்டோர் மற்றும் ஆப்பிள் ஸ்டோரில் இந்த செயலியை நீங்கள் டவுன்லோட் செய்து கொள்ளலாம் என்று பாரத் பே நிறுவனர் அஷ்னீர் குரோவர் தெரிவித்து அதன் லிங்க்களைய்ம் தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த புதிய கிரிக்கெட் செயலி கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு பெறுமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.