இந்தியா
அவர் என் மார்பகங்களையே பார்த்தார். உபேர் டிரைவர் மீது பெண் பத்திரிகையாளர் புகார்..!

டெல்லியில் பெண் பத்திரிக்கையாளர் ஒருவர் சமீபத்தில் உபேர் ஆட்டோவில் சென்று கொண்டிருந்த போது டிரைவர் தன்னுடைய மார்பகங்களையே உற்றுப் பார்த்ததாக புகார் அளித்துள்ளது பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.
டெல்லி சேர்ந்த பெண் பத்திரிகையாளர் ஒருவர் மார்ச் ஒன்றாம் தேதி உபேர் ஆட்டோவில் சென்று கொண்டிருந்தார். அப்போது ஆட்டோ ஓட்டுனர் பக்கவாட்டு கண்ணாடி வழியாக தன்னுடைய மார்பகங்களை பார்த்துக் கொண்டிருந்தார் என்றும் இதனை அடுத்து உபேர் பாதுகாப்பு அம்சத்தை பயன்படுத்த முயற்சித்தும் பயனில்லை என்றும் பாதுகாப்பு எண்ணுக்கு டயல் செய்த போது ஆடியோ தெளிவாக இல்லை என்றும் அவர் தெரிவுத்துள்ளார்.
இதனை அடுத்து டிரைவரிடம் தான் எச்சரிக்கை செய்ததாகவும் உங்களுக்கு எதிராக புகார் அளிப்பேன் என்று கூறிய போது அவர் தாராளமாக புகார் அளியுங்கள் என்று பதில் அளித்ததாகவும் அந்த பத்திரிகையாளர் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். மீண்டும் மீண்டும் தொடர்ந்து கண்ணாடி வழியே தனது மார்பகங்களை அவர் பார்த்துக் கொண்டிருப்பதை நான் உணர்ந்தேன் என்றும் பெண்களுக்கான பாதுகாப்பு அம்சங்களை உபேர் சரியாக பின்பற்றவில்லை என்றும் பலமுறை நான் பாதுகாப்பு அம்சங்களை பயன்படுத்த முயற்சித்த போது எனக்கு தோல்விதான் கிடைத்தது என்றும் உபர் டிரைவரை எச்சரித்தாலும் அவர் அதை சிறிதும் காதில் வாங்கிக் கொள்ளவில்லை என்றும் தெரிவித்திருந்தார்.
இந்த ட்விட் மிகப்பெரிய அளவில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் டெல்லி மகளிர் ஆணையம் அந்த பெண் பத்திரிகையாளரை அணுகி நடந்ததை விசாரித்தது. இதனை அடுத்து பெண் பத்திரிகையாளர் துஷ்பிரயோகம் செய்யப்பட்டது தொடர்பாக உபேர் இந்தியா மற்றும் டெல்லி காவல்துறைக்கு டெல்லி மகளிர் ஆணையம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது. பெண்களின் பாதுகாப்பிற்காக உபேர் எடுத்த நடவடிக்கைகள் என்ன என்பது குறித்து தகவலை உடனே அனுப்ப வேண்டும் என்றும் ஆணையம் கேட்டுக் கொண்டுள்ளது. இந்த நிலையில் உபேர் ஆட்டோ ஓட்டுநருக்கு எதிராக பெண் பத்திரிக்கையாளர் புகார் அளித்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
दिल्ली में एक महिला पत्रकार से Uber Auto में हुई छेड़छाड़ की दुर्भाग्यपूर्ण घटना पर Uber India और दिल्ली पुलिस को नोटिस जारी किया है। महिलाओं की सुरक्षा के लिए Uber द्वारा क्या कदम उठाए जाते हैं उसकी भी जानकारी तलब की है। pic.twitter.com/LXOF8KJHZG
— Swati Maliwal (@SwatiJaiHind) March 2, 2023