உலகம்
மனிதர்களுக்கு புற்றுநோய் இருப்பதை எறும்புகள் கண்டுபிடித்துவிடுமா? மருத்துவர்களின் கண்டுபிடிப்பு

புற்றுநோய் என்பது மனித குலத்திற்கு எதிரான ஒரு பயங்கர நோய் என்பதும் இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தற்போது நிவாரணம் செய்யும் அளவுக்கு மருத்துவம் தேறிவிட்டாலும் புற்றுநோய் என்றாலே பெரும் பயம் ஏற்படும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் புற்றுநோயை எறும்புகளால் கண்டுபிடிக்க முடியும் என்று மருத்துவர்கள் ஆராய்ச்சி முடிவு வெளிவந்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
எறும்புகளுக்கு மூக்கு இல்லை என்றாலும் அது புற்றுநோய் வாசனையை கண்டுபிடித்துவிடும் என்றும், எறும்புகளின் ஆன்டெனாவில் ஏராளமான ஆல்ஃபாக்டரி சுரப்பிகள் இருப்பதால் அதன் மூலம் மனிதர்களின் புற்று நோய் கட்டிகளைக் கண்டறிய எறும்புகளை பயன்படுத்தலாம் என்றும் மருத்துவர்கள் குழு கண்டுபிடித்துள்ளது.
புற்றுநோய் கட்டிகள் வியர்வை மற்றும் சிறுநீர் போன்ற உடல் திரவங்கள் மற்றும் சுவாச நீராவி ஆகியவற்றில் அடிக்கடி ஏற்படும் ஆவியாகும் கரிம சேர்மங்கள் எனப்படும் இரசாயனங்களின் தனித்துவமான பதிப்புகளை வெளியிடுகின்றன. Proceedings of the Royal Society B: Biological Sciences இதழில் வெளியிடப்பட்ட ஒரு புதிய ஆய்வின்படி, சிறுநீரில் உள்ள கலவைகளை எறும்புகள் மணக்கும்.
சோர்போன் பாரிஸ் நார்த் பல்கலைக்கழகத்தின் நெறிமுறை நிபுணர் மற்றும் இந்த ஆய்வின் முதன்மை ஆசிரியருமான Baptiste Piqueret என்பவர் புற்றுநோய் உயிரணுக்களில் இருந்து ஆவியாகும் கரிம சேர்மங்களை எறும்புகளால் கண்டறிய முடியும் என்பதை ஏற்கனவே நிரூபித்திருந்தார்.
புற்ருநோய் பாதித்த எலிகளிடமிருந்து சிறுநீரை சேகரித்து அதில் சர்க்கரை நீரை வைப்பதன் மூலம், புற்றுநோய் கட்டிகளின் வாசனையை கண்டறியஆராய்ச்சியாளர்கள் எறும்புகளுக்கு பயிற்சி அளித்தனர். இந்த பயிற்சியின் மூலம் எலிகளிடம் உள்ள புற்றுநோயை எறும்புகள் கண்டுபிடித்தன என்பது இந்த ஆராய்ச்சியின் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது.
எனவே இனி வருங்காலத்தில் மனிதர்களின் புற்றுநோயை கண்டுபிடிக்க பயிறி அளிக்கப்பட்ட எறும்புகளை பயன்படுத்த வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.