தமிழ்நாடு
பாராளுமன்றத்தில் ‘பெகாசஸ்’ படம் ஓடவில்லை: அண்ணாமலை கருத்து

பாராளுமன்றத்தில் காங்கிரஸ் கட்சியின் ‘பெகாசஸ்’ படம் ஓடவில்லை என்றும் அதனால் தற்போது புதிய டிராமா நடிகராக மம்தா பானர்ஜி சேர்ந்துள்ளார் என்றும் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை கருத்து தெரிவித்துள்ளார்
கடந்த சில நாட்களாக ‘பெகாசஸ்’ செயலி மூலம் எதிர்க்கட்சி தலைவர்கள், பத்திரிகையாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களின் செல்போன்கள் ஒட்டுக் கேட்கப்படுவதாக குற்றஞ்சாட்டப்பட்டது. இதனையடுத்து பாராளுமன்றம் ஸ்தம்பிக்கும் அளவுக்கு எதிர்க் கட்சிகள் ஆர்ப்பாட்டம் செய்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது
இது குறித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கருத்து கூறிய போது ‘பெகாசஸ்’ விவகாரத்தில் நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் ஓட்டிய படம் ஓடவில்லை என்றும் கதை திரைக்கதை வசனம் மூன்றையும் எழுதி பாராளுமன்றத்தில் ‘பெகாசஸ்’ என்று காங்கிரஸார் படம் போட்டார்கள் என்றும் ஆனால் அது பயனளிக்கவில்லை என்றும் கூறினார்
மேலும் விற்காத மென் பொருளை வைத்து எப்படி ஒட்டு கேட்க முடியும் என்று பாஜக தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பி உள்ளார். மேலும் காங்கிரஸ் ஒரு வேலை இல்லாத கட்சி என்றும் அந்த கட்சியின் படம் ஓடாததால் தற்போது புதிய டிராமா நடிகராக மம்தா பானர்ஜி வந்து சேர்ந்துள்ளார் என்றும் அவருடைய படமும் ஓடாது என்றும் பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்
அண்ணாமலையின் இந்த கருத்துக்கு காங்கிரஸ் கட்சியினர் என்ன பதில் சொல்ல போகின்றார்கள் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.






