Connect with us

இந்தியா

11 வருடங்களாக மனைவியை பூட்டி வைத்த வழக்கறிஞர்.. நீதிமன்றம் எடுத்த அதிரடி நடவடிக்கை..!

Published

on

11 வருடங்களாக தனது மனைவியை வழக்கறிஞர் ஒருவர் வீட்டில் பூட்டி வைத்திருந்த நிலையில் நீதிமன்றம் எடுத்த அதிரடி நடவடிக்கை காரணமாக அந்த பெண் தற்போது விடுதலை பெற்றுள்ளார்

ஆந்திராவைச் சேர்ந்த சுப்ரியா என்ற பெண்ணுக்கும் வழக்கறிஞர் தொழில் செய்யும் மதுசூதனன் என்பவருக்கும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் நடந்தது. இந்த நிலையில் திருமணம் ஆன சில ஆண்டுகள் மட்டும் பெங்களூரில் இருந்த இந்த தம்பதிகள், அதன்பின் மதுசூதனனின் தந்தை வீடு இருக்கும் விஜயநகரத்துக்கு குடி பெயர்ந்தனர்.

இந்த நிலையில் கடந்த 2011 ஆம் ஆண்டு முதல் சுப்ரியாவை அவரது கணவர் மதுசூதனன் மற்றும் அவரது பெற்றோர் வீட்டுக்குள் பூட்டி வைத்திருந்ததாகவும் சுப்ரியாவின் பெற்றோர்களை கூட பார்க்க அனுமதிக்கவில்லை என்றும் கூறப்படுகிறது. சுப்ரியாவுக்கு அடுத்தடுத்து இரண்டு குழந்தைகள் பிறந்த போதிலும் தங்களது பேரக்குழந்தைகளை கூட தனது மருமகன் பார்க்க அனுமதிக்கவில்லை என்றும் சுப்ரியாவின் பெற்றோர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் தங்களது மகள் பூட்டி வைக்கப்பட்டிருக்கிறார் என்று சந்தேகம் கொள்வதாகவும் அவர் சித்தரவதை செய்யப்படுவதாகவும் சுப்ரியாவின் பெற்றோர்கள் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.. இந்த மனு சமீபத்தில் விசாரணைக்கு வந்த போது நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்து மதுசூதனன் வீட்டை சோதனை செய்யுமாறு உத்தரவிட்டது. இதனை அடுத்து போலீசார் மதுசூதனன் வீட்டை சோதனை செய்தபோது 11 ஆண்டுகள் சுப்ரியா வீட்டில் ஒரே அறையில் பூட்டி வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

அவர் இந்த 11 ஆண்டுகளில் ஒரு சில முறை மட்டுமே மாமியார் உடன் வெளியே சென்றதாகவும் பெரும்பாலான நாட்கள் வீட்டுக்குள்ளேயே அடைத்து வைக்கப்பட்டு இருந்ததாகவும் தெரிகிறது. இரண்டு பேரக் குழந்தைகளை கூட அம்மாவை சந்திக்க விடுவதில்லை என்றும் சுப்ரியாவின் பெற்றோர்களையும் சந்திக்க விடவில்லை என்றும் விசாரணையில் தெரியவந்தது

இதனை அடுத்து சுப்ரியாவின் கணவர் மற்றும் குடும்பத்தினர் மீது பிரிவுகள் 498A (ஒரு பெண்ணின் கணவரின் கணவர் அல்லது உறவினர் கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டவர்), 343 (மூன்று அல்லது அதற்கு மேற்பட்ட நாட்களுக்கு தவறான சிறைவைப்பு), 346 (ரகசியமாக சிறையில் வைத்தல்) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

சுப்ரியாவின் தாயார் ஹேமலதா கூறுகையில், தனது மகளின் உடல்நிலை மிகவும் மோசமாக உள்ளது, ஆனால் தற்போது அவர் விடுவிக்கப்பட்டுள்ளதால் மகள் குணமடைவார் என நம்பிக்கை தெரிவித்தார்.

வணிகம்2 மாதங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்3 மாதங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி3 மாதங்கள் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்4 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு4 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்4 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?