இந்தியா
சோனியா காந்தி மருத்துவமனையில் அனுமதி: திடீர் உடல் நலக்குறைவு…

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி திடீரென ஏற்பட்ட உடல்நலக்குறைவால் டெல்லியில் உள்ள சர் கங்கா ராம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மருத்துவர்கள் அவருக்கு தொடர்ந்து சிகிச்சை மேற்கொண்டு வருகின்றனர்.

#image_title
76 வயதான காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி மூச்சுக்குழாய் தொற்று காரணமாக டெல்லியில் உள்ள சர் கங்கா ராம் மருத்துவமனையில் நேற்று அனுமதிக்கப்பட்டதாகவும் அவரது உடல்நிலை சீராக இருப்பதாகவும் மருத்துவமனை வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சோனியா காந்தி தொடர்ந்து கண்காணிப்பில் இருப்பதாகவும், அவருக்கு தொடர் சிகிச்சை நடந்து வருவதாகவும் மருத்துவமனை தெரிவித்துள்ளது.
இந்த ஆண்டில் சோனியா காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவது இது இரண்டாவது முறையாகும். ஜனவரி மாதம், வைரஸ் சுவாச நோய்த்தொற்றுக்கு சிகிச்சைக்காக டெல்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சோனியா காந்தி சமீபத்தில் ராய்பூரில் நடந்த காங்கிரஸ் கட்சியின் 85-வது காரிய கமிட்டி கூட்டத்தில் கலந்து கொண்டார். இந்நிகழ்ச்சியில் பேசிய அவர், அரசியலில் இருந்து ஓய்வு பெறுவதைக் குறிப்பிட்டு, பாரத் ஜோடோ யாத்ராவுடன் தனது இன்னிங்ஸ் முடியும் என கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.