சினிமா
சிறை நூலகத்திற்கு 1,000 புத்தகங்களை வழங்கினார் நடிகர் விஜய் சேதுபதி!

தமிழ்த் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான விஜய் சேதுபதி தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் என பல்வேறு மொழிகளில் நடித்து வருகிறார். இந்தியில் இவரது நடிப்பில் உருவாகி இருக்கும் ‘மெரி கிறிஸ்துமஸ்’ திரைப்படம் வெகு விரைவாக திரையரங்குகளில் வெளியாக உள்ளது. மேலும், தொடர்ந்து பல திரைப்படங்களை கைவசம் வைத்துள்ளார். தனது எதார்த்தமான நடிப்பின் மூலம் ரசிகர்களை கவர்ந்துள்ளார். இவரின் பல படங்கள் வெற்றியைப் பெற்றது மட்டுமின்றி, இவரது நடிப்புத் திறனை பலரும் வியந்து பாராட்டி வருகின்றனர்.
நடிகர் விஜய் சேதுபதி
இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில், விஜய் சேதுபதி மற்றும் சூரி நடிப்பில் உருவாகியுள்ள ‘விடுதலை’ எனும் திரைப்படம் நாளை திரையரங்குகளில் வெளியாக உள்ளது. விஜய் சேதுபதி நடிப்பதோடு மட்டுமின்றி, பல்வேறு பொது நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டு, சமூக அக்கறையுள்ள கருத்துகளை பகிர்ந்து வருகிறார்.
1,000 புத்தகங்கள்
இந்த நிலையில் நடிகர் விஜய் சேதுபதி, மதுரையில் உள்ள மத்திய சிறை நூலகத்திற்கு 1,000 புத்தகங்களை வழங்கி உள்ளார். இந்தப் புத்தகங்களை மதுரை மத்திய சிறைத் துறை துணைத் தலைவரான பழனி மற்றும் சிறைத் துறை காவல் கண்காணிப்பாளரான வசந்த கண்ணன் பெற்றுக் கொண்டனர். இது தொடர்பான புகைப்படம் சமூக வலைதளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது.
திரைத்துறையில் நடிப்பது மட்டுமின்றி, சில சமூக அக்கறையுள்ள செயல்களிலும் ஈடுபட்டு வருகிறார் நடிகர் விஜய் சேதுபதி. இது ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.