இந்தியா
நம்பர் 1 பணக்காரர் ஆவது எப்போது? ஆனந்த் மஹிந்திரா கூறிய ஆச்சரியமான பதில்!
Published
2 months agoon
By
Shiva
இந்தியாவின் நம்பர் ஒன் பணக்காரர் எப்போது ஆவீர்கள் என ட்விட்டர் பயனாளி ஒருவர் கேட்ட கேள்விக்கு பிரபல தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திரா கூறிய பதில் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவின் முக்கிய தொழில் அதிபர்களில் ஒருவரான ஆனந்த் மஹிந்திரா, மஹிந்திரா&மஹிந்திர்ரா நிறுவனத்தின் தலைவர் என்பதும், அவர் எப்போதும் டுவிட்டரில் ஆக்டிவ்வாக இருப்பார் என்பதும் சில அரிய வகை வீடியோக்களை வெளியிட்டு அந்த வீடியோவில் இருப்பவர்களுக்கு தனது வாழ்த்துக்களையும் சில சமயம் உதவிகளையும் செய்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
அவர் ஒரு தொழிலதிபர் என்பதையும் தாண்டி ஒரு சமூக ஆர்வலர் என்ற நோக்கத்தில் அவரது டுவிட்டர் பக்கத்திற்கு மில்லியன் கணக்கான பயனாளிகள் உள்ளனர்.
இந்த நிலையில் டுவிட்டர் பயனாளி ஒருவர் தற்போது நீங்கள் இந்தியாவின் 73வது பணக்காரராக இருக்கிறீர்கள். எப்போது நீங்கள் இந்தியாவின் நம்பர் ஒன் பணக்காரர் ஆவீர்கள் என்று கேட்கிறார். அதற்கு ஆனந்த் மஹிந்திரா பதிலளித்த போது ’உண்மை என்னவென்றால் நான் ஒருபோதும் இந்தியாவின் நம்பர் ஒன் பணக்காரர் ஆக மாற மாட்டேன், ஏனெனில் எனக்கு அதில் விருப்பமும் இல்லை என்று கூறியுள்ளார். தற்போது ஆனந்த் மஹிந்திரா இந்திய அளவில் 73வது பணக்காரராகவும் உலக அளவில் 1,382 ஆவது பணக்காரராகவும் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் ஞாயிற்றுக்கிழமை என்றால் குடும்பத்துடன் நேரம் செலவழிப்பதை கடைபிடித்து வருகிறேன் என்றும் குடும்பத்தினரின் கையை பிடித்துக்கொண்டு ஆதரவாக இருக்க வேண்டும் என்பதே எனது விருப்பம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
தொழிலதிபர்கள் பலர் குடும்பத்தை கவனிக்காமல் தொழிலே கதி என்று இருக்கும் நிலையில் ஆனந்த் மஹிந்திரா அவர்கள் தொழிலையும் கவனித்துக் கொண்டு குடும்பத்தையும் சிறப்பாக கவனித்து வருவதற்கு பல நெட்டிசன்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
सच तो ये है कि सबसे अमीर कभी नहीं बनूँगा। क्योंकि ये कभी मेरी ख़्वाहिश ही ना थी… https://t.co/fpRrIf39Z6
— anand mahindra (@anandmahindra) December 11, 2022
You may like
-
ஒரே நாளில் ரூ.1.45 லட்சம் கோடி நஷ்டம்.. 3வது இடத்தில் இருந்து 7வது இடம் சென்ற அதானி!
-
ஒரே நாளில் ரூ.7000 கோடி நஷ்டம்… உலக பணக்காரர் பட்டியலில் அதானிக்கு பின்னடைவு!
-
வேலைநீக்க நடவடிக்கை.. அமெரிக்காவில் வேலையிழந்த இந்தியர்களின் எண்ணிக்கை இத்தனை ஆயிரமா?
-
ஒரே மாதத்தில் ஒரு பில்லியன்.. இந்தியாவில் ஆப்பிள் செய்த சாதனை!
-
நியூசிலாந்து வரலாற்றில் இந்தியாவுக்கு எதிரான மோசமான தோல்வி.. இதற்கு முந்தைய மோசமான தோல்வி சென்னையிலா?
-
உலகின் பழமையான நாடுகளின் பட்டியல்.. இந்தியாவுக்கு எந்த இடம்?