இந்தியா
இந்தியாவில் யாருக்கும் இல்லாத ரத்த பிரிவு.. குஜராத் நபருக்கு கண்டுபிடிக்கப்பட்டதால் பரபரப்பு..!

இந்தியாவில் யாருக்குமே இல்லாத புது வகை ரத்த பிரிவு குஜராத்தை சேர்ந்த நபருக்கு கண்டுபிடிக்கப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
குஜராத்தை சேர்ந்த நபர் ஒருவருக்கு தனித்துவமான இஎம்எம் நெகட்டிவ் என்ற ரத்தப்பிரிவு இருப்பதை டாக்டர்கள் கண்டுபிடித்துள்ளனர். சாதாரணமாக மனிதர்களுக்கு ஏ, பி, ஓ அல்லது ஏபி வகை ரத்தங்கள் தான் இருக்கும் என்பதும் ஆனால் இஎம்எம் நெகட்டிவ் ரத்த வகை என்பது மிகவும் அரிதானது என்பது குறிப்பிடத்தக்கது.
உலகிலேயே இந்த வகை ரத்த பிரிவு உள்ளவர்கள் 9 பேர்கள் தான் உள்ளனர் என்பதும் இந்த வகை ரத்தப் பிரிவு உள்ளவர்கள் பிறருக்கு ரத்தம் கொடுக்கவா அல்லது பிறரிடம் இருந்து ரத்த தானம் பெறவும் முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் குஜராத்தை சேர்ந்த 65 வயது முதியவர் ஒருவர் இதய நோய் காரணமாக சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட நிலையில் அவரது ரத்தம் பரிசோதிக்கப்பட்டது. அப்போதுதான் அவர் இஎம்எம் நெகட்டிவ் என்ற அரிதான ரத்த பிரிவை கொண்டவர் என்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இந்தியாவிலேயே இந்த வகை ரத்தப்பிருவு கொண்ட முதல் நபர் இவர் தான் என்பது குறிப்பிடத்தக்கது. உலகில் ஏற்கனவே 9 நபர்கள் இந்த வகை ரத்த பிரிவை இருக்கும் நிலையில் இவர் பத்தாவது நபராக கண்டுபிடிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
சமீபத்தில் மாரடைப்பு ஏற்பட்டு அகமதாபாத்தில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட இந்த இதய நோயாளிக்கு தற்போது இதய அறுவை சிகிச்சை செய்ய ரத்தம் தேவைப்படுவதாகவும் ஆனால் இந்த வகை ரத்தம் கிடைக்காது என்பதால் மருத்துவர்கள் அடுத்த கட்டமாக என்ன செய்வது என்பது குறித்து ஆலோசனை செய்து வருவதாகவும் கூறப்படுகிறது.
அமெரிக்காவுக்கு அவருடைய ரத்த மாதிரி அனுப்பப்பட்டுள்ளதாகவும் அங்கு உள்ள இதே ரத்த பிரிவை சேர்ந்தவர்களிடம் இருந்து ரத்ததானம் கிடைக்குமா? என்று ஆலோசனை செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இது குறித்து அந்த முதியவரின் உறவினர்கள் அமெரிக்காவுக்கு சென்று உள்ளதாகவும் கூறப்படுகிறது.
முதியவரின் ரத்த வகையை பிரிவை சேர்ந்தவர்கள் இந்தியாவில் யாருமே இல்லை என்பதை அடுத்து அவருக்கு எப்படி ரத்தம் செலுத்தப்படும்? அவரது அறுவை சிகிச்சை எப்படி நடத்தப்படும் என்பது கேள்விக்குறியாக உள்ளது. இந்த நிலையில் சர்வதேச இரத்த மாற்று சங்கத்திலும் உதவி கேட்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.