கிரிக்கெட்
சச்சின், தோனி, விராத் இவங்க எல்லாம் இல்லை, உலகின் பணக்கார கிரிக்கெட் வீரர் யார் தெரியுமா?

உலக அளவில் கிரிக்கெட் விளையாட்டின் மூலம் சம்பாதிப்பவர்கள் இந்திய கிரிக்கெட் வீரர்கள் தான் என்று கூறப்படுவதுண்டு. ஆனால் தோனி, சச்சின், விராத் கோலியை விட அதிக அளவு கிரிக்கெட் மூலம் சம்பாதித்து வருவது ஆஸ்திரேலியா வீரர் என்ற தகவல் பெறும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.
இந்தியாவில் கிரிக்கெட் வீரராக பிரபலமாகிவிட்டால் லட்சக்கணக்கில் கோடிக்கணக்கில் பணம் கொட்டும் என்றும் பணம் கொட்டும் தேவதைகளாக இந்திய கிரிக்கெட் வீரர்கள் கருதப்படுகிறார்கள் என்பது தெரிந்தது. இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு ஏராளமான நிதி வெகுமதிகள், பரிசு பொருள்கள், சம்பளங்கள் மற்றும் ஐபிஎல் மூலம் கோடிக்கணக்கில் வருமானம் என பண மழையில் நனைவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆனால் உலகின் பணக்கார கிரிக்கட் வீரர் யார் என்ற கருத்துக்கணிப்பு சமீபத்தில் எடுக்கப்பட்ட போது ஆஸ்திரேலியா நாட்டின் முன்னாள் வீரர் ஆடம் கில்கிறிஸ்ட் என்ற தகவல் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து முன்னணி நாளிதழ் ஒன்று வெளியிட்டுள்ள அறிக்கையின் படி ஆடம் கில்கிறிஸ்ட் 380 மில்லியன் அமெரிக்க டாலர் நிகர சொத்து மதிப்புடன் உலகின் பணக்கார கிரிக்கெட் வீரராக உள்ளார் என்று தெரிவித்துள்ளது.
இரண்டாவது இடத்தை மாஸ்டர் பிளாஸ்டர் சச்சின் டெண்டுல்கர் 170 மில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் பிடித்துள்ளார். ஆடம் கில்கிறிஸ்ட் உயர் பதவியில் பல நிறுவனங்களுடன் பணிபுரிந்து வருவதாகவும், இந்த பதவிகளில் இருந்து அவர் நல்ல தொகையை சம்பாதித்து வருவதாகவும் அந்த அறிக்கை கூறுகிறது.
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி 115 மில்லியன் அமெரிக்க டாலர்களுடன் டெண்டுல்கரை அடுத்து மூன்றாவது இடத்தில் உள்ளார். நட்சத்திர பேட்ஸ்மேன் விராட் கோலியின் நிகர மதிப்பு 112 மில்லியன் டாலர்கள் மற்றும் அவர் நான்காவது இடத்தில் உள்ளார். டெண்டுல்கர், கோஹ்லி மற்றும் தோனி ஆகியோர் பல்வேறு பிராண்டுகளை அங்கீகரிக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியாவின் முன்னாள் கிரிக்கெட் வீரர்களான யுவராஜ் சிங், வீரேந்திர சேவாக் ஆகியோர் முதல் 10 பணக்கார பட்டியலில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவைப் பொறுத்தவரை கிரிக்கெட் விளையாட்டில் தன்னுடைய முழு திறமையும் காட்டி வெற்றி பெற்றுவிட்டால் அதன் பிறகு பணமழை பொழியும் என்பதும் விளம்பரத்தின் மூலம் மட்டுமே கோடிக்கணக்கில் அவர்களுக்கு கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமின்றி இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் மூலமும் கிரிக்கெட் வீரர்கள் அதிகம் சம்பாதித்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
உலகின் முதல் 10 பணக்கார கிரிக்கெட் வீரர்கள், 2023
கில்கிறிஸ்ட்: $380m (மதிப்பிடப்பட்ட நிகர மதிப்பு)
டெண்டுல்கர்: $170m
தோனி: $115 மில்லியன்
வி கோஹ்லி: $112 மில்லியன்
பாண்டிங்: $75 மில்லியன்
காலிஸ்: $70m
லாரா: $60m
சேவாக்: $40m
யுவராஜ் சிங்: $35 மில்லியன்
ஸ்டீவ் ஸ்மித்: $30 மில்லியன்