உலகம்
இந்தியா சென்றால் கொரோனா பரவும்: அமெரிக்க அரசு எச்சரிக்கை!

இந்தியா சென்றால் கொரோனா வைரஸ் பரவும் என்றும் அதனால் இந்தியாவுக்கு யாரும் செல்ல வேண்டாம் என்றும் அமெரிக்கா தனது நாட்டு மக்களுக்கு அறிவுறுத்தி உள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
உலகில் கொரோனா வைரஸால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடு அமெரிக்கா என்பதும் இதனை அடுத்து இரண்டாவது இடத்தில் இந்தியா உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. ஆனால் அமெரிக்கா இந்தியா செல்ல வேண்டாம் என தனது நாட்டு மக்களுக்கு எச்சரித்துள்ளது.
இந்தியாவில் தினமும் 2 லட்சத்திற்கும் அதிகமானோர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு வருகின்றனர் என்றும் அதனால் இந்தியா செல்வதை தவிர்க்குமாறு அமெரிக்கா தனது நாட்டு மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. இது குறித்து அமெரிக்காவின் நோய் கட்டுப்பாட்டு அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதால் இந்தியா செல்வதை தவிர்க்க வேண்டும் என்றும் இந்தியா சென்றால் கொரோனாவால் பாதிக்கப்படும் அபாயம் இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.
இதனால் இந்தியா செல்ல திட்டமிட்டிருந்த பல அமெரிக்கர்கள் தங்களது பயணத்தை ரத்து செய்து விட்டதாக கூறப்படுகிறது. மேலும் இந்தியாவிலிருந்து அமெரிக்காவிற்கு வரும் பயணிகளுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.




















