உலகம்
ஆப்பிள் பழம் ஆர்டர் செய்தவருக்கு ஆப்பிள் ஐபோன் கிடைத்த ஆச்சர்யம்..!

ஆப்பிள் பழம் ஆர்டர் செய்த நபருக்கு ஆப்பிள் ஐபோன் டெலிவரி செய்யப்பட்டுள்ள ஆச்சர்யம் இங்கிலாந்தில் நடந்துள்ளது.
இங்கிலாந்தைச் சேர்ந்தவர் 50 வயதான நிக் ஜேம்ஸ். இவர் டெஸ்கோ என்னும் சந்தையின் கீழ் சாப்பிடுவதற்கான ஆப்பிள் பழங்களை ஆர்டர் செய்துள்ளார். ஆனால், ஆர்டர் டெலிவரி வாங்கிய போது நிக் ஜேம்ஸ்-க்கு ஆச்சர்யம் காத்திருந்தது. காரணம், ஆப்பிள் பழங்களுக்குப் பதிலாக அவருக்கு ஆப்பிள் ஐபோன் எஸ்இ கிடைத்திருந்தது.
டெஸ்கோ என்னும் நிறுவனம் விளம்பரத்துக்காக குறிப்பிட்ட நபர்களுக்குப் பரிசாக எதிர்பாராத சர்ப்ரைஸ் கொடுக்கப் போவதாக அறிவித்திருந்துள்ளது. இதன் காரணமாகவே நிக் ஜேம்ஸ்-க்கு அதிர்ஷ்டம் அடித்து அவருக்கு ஆப்பிள் ஐபோன் எஸ்இ கிடைத்துள்ளது. ஈஸ்டர் சமயத்தில் தனக்குக் கிடைத்த மிகப்பெரிய சர்ப்ரைஸ் இது என நிக் ஜேம்ஸ் ஐபோன் கிடைத்தது குறித்துக் குறிப்பிட்டுள்ளார்.
A big thanks this week to @Tesco & @tescomobile. On Wednesday evening we went to pick up our click and collect order and had a little surprise in there – an Apple iPhone SE. Apparently we ordered apples and randomly got an apple iphone! Made my sons week! ???? #tesco #substitute pic.twitter.com/Mo8rZoAUwD
— Nick James (@TreedomTW1) April 10, 2021