தமிழ்நாடு
அட்ரஸ் இல்லாதவர் அமர் பிரசாத் ரெட்டி…. போட்டுத்தாக்கும் அதிமுக!

தமிழக பாஜக ஐடி விங் தலைவராக இருந்த சிடிஆர் நிர்மல் குமார் அந்த கட்சியில் இருந்து விலகி எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்ததையடுத்து அண்ணாமலையின் நெருங்கிய நண்பரான அமர் பிரசாத் ரெட்டி அதிமுக மற்றும் எடப்பாடி பழனிசாமியை மிகக்கடுமையாக விமர்சித்திருந்தார். இதற்கு அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தற்போது பதிலடி கொடுத்துள்ளார்.

#image_title
பாஜகவின் விளையாட்டு மற்றும் திறன் மேம்பாட்டு பிரிவு தலைவரும் அண்ணாமலையின் நெருங்கிய நண்பருமான அமர் பிரசாத் ரெட்டி தனது டுவிட்டர் பக்கத்தில், நாலாண்டு காலம் 420க்களாக வலம் வந்தவர்கள் கதையெல்லாம் ஊரறிந்த விவகாரம். அப்படி இருக்கையில், கொள்கையற்ற கட்சி மாறி-பிழைப்புவாதிகளை வைத்து, அடுத்தவரை கேவலப்படுத்தி ரசிக்கும் கேவலமானவர்கள் தலைமைப் பொறுப்புக்குத் தகுதியானவரா?
கொங்கு மண்டலத்தை தங்கள் கோட்டை என கூறியவர்களை வாக்காளர்கள் வெளியேற்றியுள்ளனர். 66,000 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்றது மூச்சு விடுவதற்கான அறிகுறி கூட இல்லை, கோட்டை பிடிப்பதை மறந்து விடுங்கள். தமிழகத்தின் ஒரே எதிர்காலம் பாஜகதான் என சில தினங்களுக்கு முன்னர் கூறியிருந்தார்.
இந்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அதிமுகவின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரிடம் அமர் பிரசாத் ரெட்டியின் அதிமுக குறித்த விமர்சனம் பற்றி கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதில் அளித்த அவர், தலைவர்கள் பேசிக்கொள்ளும் போது ஆள் அட்ரஸ் இல்லாதவர்களின் கருத்துகளுக்கு எல்லாம் பதில் சொல்ல முடியாது என்றார்.