Connect with us

சினிமா செய்திகள்

கங்கனா ரனாவத்தின் ‘தலைவி’: திரைப்பட விமர்சனம்

Published

on

பிரபல பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத், அரவிந்தசாமி, சமுத்திரக்கனி உள்பட பலர் நடிப்பில் ஏஎல் விஜய் இயக்கத்தில், ஜீவி பிரகாஷ் இசையில் உருவாக்கிய ’தலைவி’ திரைப்படம் இன்று ரிலீஸ் ஆகி உள்ள நிலையில் இந்த படத்தின் விமர்சனத்தை தற்போது பார்ப்போம்.

பொதுவாக ஒரு அரசியல் தலைவரின் வாழ்க்கை வரலாற்றை படமாக்க வேண்டும் என்றால் அதில் எதை சொல்ல வேண்டும், எதை சொல்ல கூடாது, எதை பெரிதாக காட்ட வேண்டும், எதை மறைக்க வேண்டும் என்பதை சரியாக செய்ய வேண்டும். அதனை புரிந்து இயக்குனர் விஜய் இந்த படத்தை இயக்கி உள்ளார் என்று தான் சொல்ல வேண்டும்.

எம்ஜிஆர் என்னும் மாபெரும் வசீகரமான தலைவர், அவரது கட்சிக்காக உழைக்க முன் வரும் ஜெயலலிதா, ஜெயலலிதாவுக்கு ஏற்பட்ட அவமானங்கள், அரசியலில் ஏற்பட்ட ஏற்ற இறக்கங்கள் ஆகியவைகளை மிக அழகாக இந்த படத்தின் ஒவ்வொரு காட்சியிலும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த படத்தின் மிகப்பெரிய பிளஸ் என்று சொல்ல வேண்டுமானால் சரியான கேரக்டருக்கு சரியான நடிகர்களை தேர்வு செய்து தான். குறிப்பாக ஜெயலலிதா கேரக்டரில் கங்கனா ரனாவத் எப்படி பொருந்துவார் என்று படம் ஆரம்பிக்கும் போது கேள்வி கேட்டு அனைவரின் வாயை அடைத்து உள்ளார் ஏ.எல்.விஜய். அதேபோல் அச்சு அசலாக எம்ஜிஆர் ஆகவே மாறிவிட்ட அரவிந்தசாமி, சசிகலா கேரக்டருக்கு பூர்ணா, கருணாநிதி கேரக்டருக்கு நாசர், எம்ஆர் ராதா கேரக்டருக்கு ராதாரவி, ஆர் எம் வீரப்பன் கேரக்டருக்கு சமுத்திரகனி என சரியான நடிகர்களை தேர்வு செய்து பாதி வெற்றி பெற்றுவிட்டார் ஏ.எல்விஜய் என்று கூறலாம்.

மிகத் துணிச்சலான வசனங்கள், கொஞ்சம் கூட தொய்வில்லாத திரைக்கதை ஆகியவை இந்த படத்தின் மிகப்பெரிய பிளஸ். ஜெயலலிதா என்னும் இரும்பு மனுஷி எடுத்த துணிவான முடிவுகள், சந்தித்த அவமானங்கள், அவமானங்களை எதிர்கொண்ட விதம், தேர்தல் வெற்றிகள், தேர்தல் தோல்விகள் ஆகியவை மிக அழகாக இந்த படத்தில் காண்பிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக வசனங்கள் குறைவாகவும் விஷுவல் காட்சிகள் அதிகமாகும் இருப்பது இயக்குனரின் திறமையை வெளிப்படுத்துகிறது.

படத்தின் ஆரம்பத்தில் ஜெயலலிதா சட்டசபையில் அவமானப்படும் காட்சிகளிலிருந்து ஆரம்பித்து, மீண்டும் இந்த சட்டசபைக்கு முதல்வராக தான் வருவேன் என சபதம் எடுப்பது, அந்த சபதத்தை அப்படியே கிளைமாக்ஸ் காட்சிகளில் இணைப்பது மிகச் சிறந்த திரைக்கதைக்கு எடுத்துக்காட்டு என்பது குறிப்பிடத்தக்கது.

எம்ஆர் ராதா துப்பாக்கி சூடு, இந்திரா காந்தியின் மறைவு, ராஜீவ் காந்தி குண்டு வெடிப்பு, எம்ஜிஆரின் மனைவி ஜானகி அம்மாள் முதல்வராக செய்யும் முயற்சி, ஆட்சி கவிழ்ப்பு, பாராளுமன்றத்தில் கம்பீரமாக ஆங்கிலத்தில் பேசும் திறமை, தமிழுக்கும் தமிழ்நாட்டுக்கும் செய்த தியாகங்கள் என ஜெயலலிதாவின் ஒவ்வொரு வாழ்க்கையின் அங்கங்களையும் மிகச்சரியாக பதிவு செய்துள்ளார் ஏ.எல்விஜய்.

அதேபோல் நடிகையாக இருக்கும் போது அம்மாவை இழந்த சோகம், திருமணத்திற்காக தவிக்கும் இளம் பெண்ணின் மனது, அதன்பின் எடுத்த அதிரடியான முடிவு, எம்ஜிஆருக்காக வாழ்க்கையைத் தியாகம் செய்தது என ஜெயலலிதா பக்கம் உள்ள அனைத்து பாசிட்டிவ் நிகழ்வுகளையும் ஒட்டுமொத்தமாக காட்ட முயற்சிக்கும் படம் தான் தலைவி.

மொத்தத்தில் ஒட்டுமொத்த திரைக்கதை, கேரக்டர் தேர்வு மற்றும் வசனங்கள், பாடல்கள் ஆகிய அனைத்துமே பிளஸ் பாயிண்டுகள் என்பது குறிப்பிடதக்கது. ஜிவி பிரகாஷின் பின்னணி இசை படத்திற்கு மேலும் வலு சேர்க்கிறது. மிகச்சரியான கிளைமாக்ஸ் இந்த படத்தில் இருப்பதால் படம் பார்த்துவிட்டு தியேட்டரை விட்டு வெளியே வரும்போது ஒரு மிகப்பெரிய மன திருப்தி ஏற்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. நிச்சயம் இந்த படத்திற்கு குறைந்தது மூன்று தேசிய விருதுகளாவது கிடைக்கும்.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

இந்தியா16 மணி நேரங்கள் ago

மகளிர் இடஒதுக்கீடு மசோதா, நாடாளுமன்ற மக்களவையில் தோல்வியடைந்தது.

ஆட்டோமொபைல்18 மணி நேரங்கள் ago

கார் கண்ணாடியில் இந்த வாசகம் எழுதப்பட்டுள்ளது நோட் பண்ணியிருக்கீங்களா..? ஏன் தெரியுமா?

இந்தியா18 மணி நேரங்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 17.04.2026

ஆன்மீகம்18 மணி நேரங்கள் ago

திருநள்ளாறு சனி பெயர்ச்சி 2026: சித்திரை அமாவாசையில் சனி நட்சத்திர மாற்றம் – இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம்!

வணிகம்18 மணி நேரங்கள் ago

அட்சய திருதியை 2026: தங்க விலை லாக் செய்வது லாபமா? மறைந்திருக்கும் நுணுக்கங்கள் என்ன?

செய்திகள்18 மணி நேரங்கள் ago

பெண்கள் இடஒதுக்கீடு & தொகுதி மறுவரையறை மசோதாக்கள்: ராகுல் காந்தி மற்றும் கனிமொழி கடும் எதிர்ப்பு!

வணிகம்18 மணி நேரங்கள் ago

EPS ஓய்வூதியம் எப்படி கணக்கிடப்படுகிறது? தனியார் ஊழியர்களுக்கு மாதம் எவ்வளவு கிடைக்கும்?

weekly prediction, வாரபலன், weekly horoscope
ஆன்மீகம்18 மணி நேரங்கள் ago

ஏப்ரல் 20–26 வார ராசிபலன் 2026: இந்த வாரம் எந்த ராசிக்கு அதிர்ஷ்டம் காத்திருக்கிறது?

இந்தியா19 மணி நேரங்கள் ago

ஒரு குடும்பத்தின் நிதி நிலைமை சீரழிவதற்கான மிக முதன்மையான பத்துக் காரணங்கள்……

இந்தியா19 மணி நேரங்கள் ago

தோ்தல் அலுவலா்களால் பாழாகும் பள்ளி சுவா்கள்?

இந்தியா7 நாட்கள் ago

நமக்கு வரும்; மெசேஜ் இன்பாக்சில் இவற்றின் ரகசியம் உங்களுக்குத் தெரியுமா?

வணிகம்6 நாட்கள் ago

இன்றைய தங்கம் விலை (12/04/2026)!

சினிமா7 நாட்கள் ago

TN 2026 திரை விமர்சனம்: அரசியல் சாட்டையுடன் வந்த படம் – பலம் இருந்தும் பலவீனம் காட்டிய கிளைமேக்ஸ்!

ஆரோக்கியம்7 நாட்கள் ago

பப்பாளி விதைகளின் அதிசய நன்மைகள்: செரிமானம் முதல் இதய ஆரோக்கியம் வரை! எப்படி பயன்படுத்துவது?

இந்தியா7 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 11.04.2026

ஆரோக்கியம்7 நாட்கள் ago

ஆந்திரா ஸ்டைல் சுட்ட பச்சை மாங்காய் ரசம்: கோடைக்காலத்தில் அவசியம் சுவைக்க வேண்டிய ஸ்மோக்கி ரெசிபி!

இந்தியா5 நாட்கள் ago

வாக்குச் சாவடியில் செல்போன்கள் கொண்டு செல்ல அனுமதியில்லை

ஆரோக்கியம்6 நாட்கள் ago

அட்சய திரிதியா 2026: 50 ஆண்டுகளுக்குப் பிறகு அரிய யோகம் – இந்த 4 ராசிகளுக்கு செல்வமும் வெற்றியும்!

ஆரோக்கியம்6 நாட்கள் ago

கோடைகால ஆரோக்கியம்: வெயிலில் தவிர்க்க வேண்டிய உணவுகள் என்ன? முழு வழிகாட்டி

வணிகம்6 நாட்கள் ago

DA vs DR விவகாரம்: ஓய்வூதியதாரர்களுக்கு உச்சநீதிமன்றம் முக்கிய தீர்ப்பு – சமத்துவம் கட்டாயம்!

Translate »
Making digital tools accessible for everyone. Surowce do produkcji suplementów diety. Danke für euer vertrauen und eure unterstützung ! eure spd fraktion chorweiler.