சினிமா செய்திகள்
‘அண்ணாத்த’ திருவிழா ஆரம்பம்: ஃபர்ஸ்ட்லுக், மோஷன் போஸ்டர் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ‘அண்ணாத்த’ திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் வரும் தீபாவளி அன்று ரிலீசாக உள்ள இந்த படத்தின் புரமோஷன் பணிகள் விரைவில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது
அதன் அடிப்படையில் நாளை முதல் புரமோஷன் பணிகள் தொடங்குவதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. நாளை காலை பதினோரு மணிக்கு ‘அண்ணாத்த’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும், நாளை மாலை 6 மணிக்கு ‘அண்ணாத்த’ திரைப்படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகும் என சன் பிக்சர்ஸ் நிறுவனம் சற்று முன்னர் தனது ட்விட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது
மேலும் இது குறித்த அறிவிப்பில் வெளியாகியுள்ள அட்டகாசமான போஸ்டர் உருவாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. ரஜினி ரசிகர்களுக்கு தீபாவளி விருந்தாக வெளியாக இருக்கும் ‘அண்ணாத்த’ திரைப்படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
ரஜினியின் ’தர்பார்’ திரைப்படம் கடந்த 2020ஆம் ஆண்டு பொங்கல் தினத்தில் வெளியான நிலையில் ஒன்றரை ஆண்டுகள் கழித்து வெளியாகும் ரஜினிகாந்த் படம் என்பதால் இந்த படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
மேலும் நீண்ட இடைவெளிக்கு பின்னர் இந்த படம் முழுக்க முழுக்க குடும்ப சென்டிமென்ட் கலந்த படம் என்று கூறப்படுவதால் சிறுத்தை சிவாவின் அற்புதமான இயக்கத்தில் மெலோடி இசையில் உருவாகியிருக்கும் படம் என்பதாலும் இந்த படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது
ரஜினிகாந்த், மீனா, குஷ்பு, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், ஜாக்கி ஷெராப், ஜெகபதி பாபு, பிரகாஷ்ராஜ், வேல ராமமூர்த்தி, சூரி, சதீஷ் உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு டி. இமான் இசையமத்து வருகிறார். வெற்றி ஒளிப்பதிவில் ரூபன் படத்தொகுப்பில் உருவாகி வரும் இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் பிரமாண்டமாக தயாரித்துள்ளது.
#Annaatthe thiruvizha aarambam!#AnnaattheFirstLook Tomorrow @ 11 AM | #AnnaattheMotionPoster Tomorrow @ 6 PM@rajinikanth @directorsiva #Nayanthara @KeerthyOfficial @immancomposer @khushsundar #Meena @sooriofficial @AntonyLRuben @dhilipaction @vetrivisuals #AnnaattheFLTomorrow pic.twitter.com/RTOr8SFqWE
— Sun Pictures (@sunpictures) September 9, 2021


















