சினிமா செய்திகள்
அஜித்தின் இந்தப் படம் மீண்டும் தியேட்டர்களில் ரிலீஸாகிறது- தல ரசிகர்கள் குஷி அண்ணாச்சி

தல அஜித்தின் பில்லா திரைப்படம் மீண்டும் திரையரங்குகளில் ரிலீஸாக உள்ளது. இது தல ரசிகர்களுக்கு குஷியான செய்தியாக வந்துள்ளது.
2007 ஆம் ஆண்டு வெளியான பில்லா, அஜித்தின் திரை வாழ்க்கையில் மிகப் பெரும் திருப்பு முனையாக இருந்தது. பல ஃபிளாப் படங்களைக் கொடுத்து வந்த அஜித், பில்லா மூலம் வெற்றிப் பாதைக்குத் திரும்பினார். மேலும் சூப்பர்ஸ்டார் ரஜினி நடித்த படத்தின் ரீமேக் என்பதாலும், அஜித் ரசிகர்களால் இந்தப் படம் அதிகம் கொண்டாடப்பட்டது.
தற்போது அஜித், வலிமை படத்தில் நடித்து வருகிறார். கிட்டத்தட்ட ஓராண்டுக்கும் மேலாக வலிமை படத்தின் ஷூட்டிங் நடைபெற்று வருகிறது.
கடந்த 2019 ஆம் ஆண்டு போனி கபூர் தயாரிப்பில், ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் வெளியான திரைப்படம் ‘நேர்கொண்ட பார்வை’. இந்தப் படம் மெகா ஹிட் அடித்தது. இதைத் தொடர்ந்து இந்தக் கூட்டணியின் அடுத்தப் படைப்பாக வலிமை உருவாகி வருகிறது.
கொரோனா கட்டுப்பாடுகளுக்குப் பின்னர் விறுவிறுப்பாக நடந்து வரும் வலிமை படத்தின் ஷூட்டிங் இன்னும் ஒரு சில நாட்களில் முடிவடைய உள்ளதாம். வெளிநாடுகளில் படமாக்க வேண்டிய சில காட்சிகள் மட்டும் இன்னும் பாக்கி உள்ளதாக படக்குழுத் தரப்பு தகவல் சொல்கிறது. இந்நிலையில் அனைத்து போஸ்ட் புரொடெக்ஷன் பணிகளையும் முடித்து, வரும் ஏப்ரல் மாதம் ‘வலிமை’ திரைப்படத்தை வெள்ளித்திரையில் ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டு வருகிறது.
#Thala #Ajith ‘s #Billa (2007) to re-release soon in Theaters.. pic.twitter.com/TItTPbmNTe
— Ramesh Bala (@rameshlaus) February 4, 2021
அதே நேரத்தில் போஸ்ட் புரொடெக்ஷன் வேலைகள் அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதால், ஆகஸ்ட் இரண்டாவது வாரம் படம் வெளியாகலாம் எனத் தெரிகிறது.
அஜித் ரசிகர்கள், ‘படம் சீக்கிரம் வரலைனாலும் பரவாயில்ல. அப்பப்போ அப்டேட் மட்டுமாவது கொடுங்க’ என்று வினோத், போனி கபூரிடம் கெஞ்சி வருகின்றனர். இந்நிலையில் பில்லா படம் ரிலீஸ், தல ரசிகர்களை கொஞ்சம் ஆசுவாசப்படுத்தலாம்.