சினிமா செய்திகள்
மீண்டும் கொடூர வில்லனாய் மாறிய விஜய் சேதுபதி… ‘உப்பென்னா’ ட்ரெய்லர் வெளியீடு!

நடிகர் விஜய் சேதுபதி மீண்டும் வில்லன் ஆக அவதாரம் எடுத்துள்ள படம் உப்பென்னா. தெலுங்குவில் விரைவில் வெளியாக உள்ள இந்தப் படத்தில் வில்லத்தனத்தில் மிரட்டி உள்ளார் சேதுபதி.
தெலுங்கு திரைப்பட உலகில் நடிகர் சிரஞ்சீவியின் ‘சையிரா நரசிம்ம ரெட்டி’ படத்தின் மூலம் நடிகர் விஜய் சேதுபதி அறிமுகம் ஆனார். அந்தப் படத்தில் சிறிய கெளரவ தோற்றத்தில் தான் நடித்து இருந்தார். அதன் பின்னர் தற்போது உப்பென்னா திரைப்படம் மூலம் மீண்டும் தெலுங்குவில் நடித்துள்ளார்.
விஜய் சேதுபதி அடுத்ததாக ‘சலார்’ படத்தில் பிரபாஸ்- கேஜிஎஃப் யஷ் ஆகியோர் ஹீரோக்கள் ஆக நடிக்க அவர்களுடன் வில்லன் ஆக மோத உள்ளார். இந்தப் படம் பாகுபலி போன்று பிரம்மாண்ட பட்ஜெட்டில் எடுக்கப்பட உள்ள திரைப் படமாகும். இந்தப் படத்தில் பிரபாஸ்-க்கு ஜோடியாக நடிகை ஸ்ருதி ஹாசன் நடிக்கிறார்.