சினிமா செய்திகள்
பொண்ணுங்க கோயிலுக்குள்ள வந்தா தீட்டாகிடுமா, எந்த கடவுள் சொல்லுச்சு? ஐஸ்வர்யா ராஜேஷ் கேள்வி!
Published
7 days agoon
By
Saranya
நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தொடர்ந்து ஹீரோயின் சென்ட்ரிக் படங்களில் நடித்து வருகிறார். கடந்த ஆண்டு இறுதியில் ஒரே நாளில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்த டிரைவர் ஜமுனா மற்றும் மலையாள ரீமேக்கான தி கிரேட் இந்தியன் கிட்சன் உள்ளிட்ட படங்கள் வெளியாக இருந்தன.
கடைசி நேரத்தில் இரண்டு படங்களும் ஒரே நேரத்தில் வந்தால் பெரும் நஷ்டம் ஏற்படும் என்பதற்காக டிரைவர் ஜமுனா படம் மட்டுமே முதலில் வெளியானது. ஆனால், அந்த படம் ரசிகர்களின் பொறுமையை ரொம்பவே சோதித்து படு தோல்வியை சந்தித்தது.

#image_title
இந்நிலையில், விரைவில் தி கிரேட் இந்தியன் கிச்சன் படம் வெளியாக உள்ள நிலையில், சபரி மலை கோயிலுக்குள் பெண்கள் அனுமதிக்கப்படாதது குறித்த கேள்வி எழுப்பப்பட்டது. அப்போது பேசிய நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ், பொண்ணுங்களுக்குனா தீட்டா..”எந்த கடவுள் சொல்லுச்சு. கடவுள் எல்லோருக்கும் ஒன்று தான். ஆண், பெண் வித்தியாசமெல்லாம் கடவுளுக்கு கிடையாது. எந்தக்கடவுளும் என் கோவிலுக்கு இவர்கள் வரலாம், அவர்கள் வரக்கூடாது என்று சொல்லவில்லை.
அப்படி எந்த கடவுளாவது சொல்லியிருக்கிறார்களா? இருந்தால் சொல்லுங்கள். எந்த கடவுளும் இது பண்ணக்கூடாது. இது சாப்பிடக்கூடாது என சட்டம் வைக்கவில்லை. எல்லேமே மனிதர்கள் உருவாக்கியது. நான் இது போன்ற கட்டுப்பாடுகளை எப்போதும் நம்புவதில்லை. இப்பொழுது கூட ஆணாதிக்கம் இருக்கிறது. ஆணாதிக்கம் என்பது கிராமத்து பக்கம் நிறைய இருக்கின்றது என்பது எனது கருத்து. சபரிமலையில் பெண்கள் அனுமதிக்கப்படாதது குறித்து நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் கருத்து தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

#image_title
ஐயப்ப பக்தர்கள் மற்றும் இந்து அமைப்பினர்கள் ஐஸ்வர்யா ராஜேஷின் கருத்தை எதிர்த்து சமூக வலைதளங்களில் அவரை கடுமையாக திட்டித் தீர்த்து வருகின்றனர். சமூக ஆர்வலர்கள் ஐஸ்வர்யா ராஜேஷின் கருத்தை வரவேற்றுள்ளனர். நெட்டிசன்கள் படத்தின் ப்ரோமோஷனுக்காக இப்படி எதையாவது பேசி பரபரப்பை கிளப்புறாங்களாமாம் என கிண்டலடித்து வருகின்றனர்.
You may like
-
AK 62 படம் நல்லா பண்ணனும் ஐயப்பா! சபரிமலையில் விக்னேஷ் சிவன்; அஜித் ரசிகர்கள் வேண்டுதல்!
-
சபரிமலை செல்லும் விஜய், அஜித் ரசிகர்களுக்கு சிக்கல்: அதிரடி உத்தரவு
-
சபரிமலைக்குத் தமிழ்நாடு வழியாக டிசம்பர் 5-ம் தேதி முதல் சிறப்பு ரயில் அறிவிப்பு!
-
தனுஷ் என்னை உண்மையாகவே காதலித்தார்: பிரபல நடிகையின் அதிர்ச்சி பேட்டி!
-
ஆர்ஜே பாலாஜிக்கு ஜோடி இந்த பிரபல நடிகையா? ஆச்சரியத்தில் கோலிவுட் திரையுலகினர்!
-
சபரிமலை கோவில் நடை திறப்பது எப்போது? கோவில் நிர்வாகம் அறிவிப்பு!