இந்தியா
விமான பயணிகளுக்கு மகிழ்ச்சி செய்தி.. அதிர்ச்சியில் விமான நிறுவனங்கள்!

உயர் வகுப்பு விமான டிக்கெட்களை புக் செய்தவர்கள் கட்டாயத்தின் பேரில் குறைந்த வகுப்புக்குப் பயணிக்க வேண்டும் என்ற சூழலுக்குத் தள்ளப்பட்டால் 75 சதவிகித கட்டணத்தைத் திருப்பி வழங்க வேண்டும் என விமான போக்குவரத்துத் துறை விதிகளில் திருத்தம் செய்துள்ளது.
வளர்ந்த நாடுகளில் விமானங்களில் பயணிக்கும் பயணிகளுக்கு பல்வேறு சாதகமான விதிகள் உள்ளன.
விமானம் ரத்து செய்யப்பட்டால் அதற்கான கட்டணத்தைத் திருப்பி வழங்க வேண்டும். விமான தாமதமானால் அதற்கு இழப்பீடுகள் வழங்க வேண்டும். தங்கும் வசதிகள் ஏற்படுத்தித் தர வேண்டும் என பல்வேறு விதிகள் உள்ளன.
ஆனால் இந்தியாவில் அப்படி விதிகள் எதுவும் இல்லை என்பதால், விமான நிறுவனங்கள் விமானம் ரத்தானால் அதற்கான கட்டணத்தைத் திருப்பி வழங்காமல் அடுத்த பயணத்தில் கழித்துக்கொள்ளலாம் என கூறி ஏமாற்றி வருகின்றன.

#image_title
இந்நிலையில் விமான போக்குவரத்து விதிகளில் பல்வேறு மாற்றங்கள் செய்துள்ள விமான போக்குவரத்துத் துறை, உயர் வகுப்பு விமான டிக்கெட்களை புக் செய்தவர்கள் கட்டாயத்தின் பேரில் குறைந்த வகுப்புக்குப் பயணிக்க வேண்டும் என்ற சூழலுக்குத் தள்ளப்பட்டால் 75 சதவிகித கட்டணத்தைத் திருப்பி வழங்க வேண்டும் என கூறியுள்ளது. இதன் மூலம் விமானப் பயணிகளின் உரிமைகளை இது வலுப்படுத்தும் என்று கூறப்படுகிறது.