இந்தியா
லக்னோ பூகம்பம்.. கார்ட்டூன் தொடர் பார்த்து தப்பித்த 6 வயது சிறுவன்!

சமீபத்தில் லக்னோவில் நடந்த பூகம்பத்தின் போது கார்ட்டூன் படம் பார்த்து பூகம்பத்தில் இருந்து தப்பிப்பது எப்படி என்பதை சமயோசிதமாக தெரிந்து கொண்ட ஆறு வயது சிறுவன் உயிர் பிழைத்த சம்பவம் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.
கடந்த செவ்வாய்க்கிழமை மாலை லக்னோவில் அடுக்குமாடு குடியிருப்பு ஒன்று திடீரென இடிந்து விழுந்ததில் இடுப்பாடுகளுக்கு இடையே சிக்கிய நபர்களை மீட்கும் பணியை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதுவரை மூன்று பேர் இறந்துள்ளதாகவும் ஒரு சிலர் காயம் அடைந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
இந்த நிலையில் இந்த சம்பவத்தில் சமாதிவாடி கட்சியின் செய்தி தொடர்பாளர் ஹைதர் என்பவரின் மனைவி மற்றும் தாயார் ஆகிய இருவரும் இடுபாடிகளில் சிக்கி உள்ளதாக தெரிகிறது. இந்த நிலையில் ஹைதரின் 6 வயது சிறுவன் கார்ட்டூன் படம் பார்த்த சம்பவத்தை ஞாபகம் வைத்து உயிர் பிழைத்த நிகழ்வு பெறும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.
ஆறு வயதான முஸ்தபா கார்ட்டூன் நிகழ்ச்சியான டோரமான் என்ற நிகழ்ச்சியை பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது பூகம்பம் வந்தால் அதிலிருந்து தப்பிப்பது எப்படி என்பது குறித்து வழிகாட்டுதலும் அதில் காட்சிகள் ஆக இருந்தது. இந்த சம்பவத்தை நினைவு கூர்ந்த முஸ்தபா திடீரென கட்டிடம் குலுங்கிய போது தொலைக்காட்சியில் பார்த்துக் கொண்டிருந்த நிகழ்வை ஞாபகம் வைத்து உடனடியாக கட்டிலுக்கு அடியில் போய் ஒளிந்து கொண்டார்.
எனக்கு அப்போது பயமாக இருந்தது, ஆனால் கார்ட்டூன் நிகழ்ச்சியான டோரமான் எபிசோடை நான் நினைவுக்கு வந்தேன். அதில் உள்ள நோபிதா என்ற கேரக்டர் பூகம்பத்தின் போது மூலையிலோ அல்லது படுக்கைக்கு அடியிலோ தஞ்சமடைந்து தன்னை பாதுகாத்துக் கொள்வதை ஞாபகப்படுத்தினேன். உடனடியாக நான் பூகம்பம் வந்ததை உணர்ந்ததும் கட்டிலுக்கு அடியில் போய் படுத்து கொண்டேன்.
அங்கிருந்து கொண்டு என் அம்மா அலறியபடி ஓடி வருவதை பார்த்தேன். சிறிது நேரத்திற்கு பின் இருட்டாக மாறிவிட்டது. அப்போது நான் அம்மா அப்பாவுக்காக கதறி அழுதேன், ஆனால் பலன் இல்லை. லேசாக மூச்சு திணறிலும் ஏற்பட்டது. அதன் பிறகு என்ன நடந்தது என்று எனக்கு தெரியவில்லை. ஒரு சில மணி நேரம் கழித்து ஒரு சிலர் என்னை காப்பாற்றி அழைத்துச் செல்வதை உணர்ந்தேன்’ என்று கூறியுள்ளார்.
இந்த சம்பவம் குறித்து ஆறு வயது சிறுவன் அளித்ஹ்ட பேட்டி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது, கார்ட்டூன் படம் பார்த்ததன் மூலம் சமயோசிதமாக ஆறு வயது சிறுவன் உயிர் தப்பியது அந்த பகுதியில் உள்ளவர்களை ஆச்சரியத்தில் ஏற்படுத்தி உள்ளது.