இந்தியா
இந்தியாவில் மீண்டும் உச்சம் தொடும் கொரோனா பாதிப்பு! 24 மணி நேரத்தில் 47 ஆயிரம்!

கடந்த சில நாட்களாக இந்தியாவில் தமிழகம் உள்பட பல மாநிலங்களில் கொரோனா வைரஸ் பாதிப்பு மிக அதிகமாகிக் கொண்டே வருகிறது என மத்திய சுகாதாரத்துறை எச்சரித்துள்ளது.
குறிப்பாக மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம், டெல்லி, கேரளா, உள்ளிட்ட மாநிலங்களில் மிக அதிகமாக கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. தமிழகத்திலும் சென்னை உள்பட பல மாவட்டங்களில் கொரோனா வைரஸ் பாதிப்பு கடந்த 10 நாட்களில் இரு மடங்காகி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் சுமார் 47 ஆயிரம் பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு உள்ளதாக மத்திய சுகாதாரத்துறை பதிவு செய்துள்ளது. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 46.951 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு நவம்பர் மாதத்திற்குப் பிறகு மிக அதிக அளவிலான ஒரு நாள் கொரோனா பாதிப்பு இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையடுத்து மத்திய மற்றும் மாநில அரசுகள் அதிரடியாக கொரோனாவுக்கு எதிரான நடவடிக்கையை எடுக்க உறுதி செய்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. இதனை அடுத்து சில அதிரடி நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

















