சினிமா செய்திகள்
‘தென் இந்திய படங்களை ஒப்பிட வேண்டாம்’- ரகுல் ப்ரீத்சிங் காட்டம்!

படங்களை மொழிவாரியாக பிரித்து ஒப்பிட வேண்டாம் என நடிகை ரகுல் ப்ரீத்சிங் தெரிவித்துள்ளார்.
‘தடையற தாக்க’, ‘தீரன் அதிகாரம் ஒன்று’ உள்ளிட்ட படங்களில் நடித்தவர் ரகுல் ப்ரீத் சிங். தற்போது, அவர் கைவசம் ‘இந்தியன் 2’, ‘அயலான்’ ஆகிய படங்கள் உள்ளது. இந்த நிலையில் சமீபத்தில் ஊடகம் ஒன்றிற்கு அளித்துள்ள பேட்டியில் படங்களை மொழிவாரியாக பிரித்து ஒப்பிட வேண்டாம் என காட்டமாக கருத்து தெரிவித்துள்ளார் ரகுல் பிரீத் சிங்.

ரகுல் ப்ரீத் சிங்
அந்த பேட்டியில் அவர் கூறியிருப்பதாவது, ” பல தென்னிந்திய மொழி படங்கள் இந்தி சேனல்களில் ஒளிபரப்பாகும் பொழுது அங்கிருக்கும் பார்வையாளர்களை பரவலாக சென்றடைகிறது.
அந்த படங்கள் அவர்களுடைய நல்ல வரவேற்பு பெற்று கொண்டாடவும் படுகிறது. ஒரு உண்மையை நாம் இங்கு புரிந்து கொள்ள வேண்டும். இந்தி மற்றும் பிராந்திய மொழி படங்கள் அனைத்தும் இந்திய சினிமாவின் ஒரு பகுதியே.
இதை பிரித்துப் பார்த்து ஒப்பிட வேண்டாம். நல்ல படங்கள் என்பது நிச்சயம் எந்த மொழியில் வெளியானாலும் அதற்கான பார்வையாளர்களை அது சென்றடையும். சமூக வலைதளங்களின் வளர்ச்சியால் ஒவ்வொருவரும் இப்பொழுது தங்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். இது விவாதங்களுக்கு வழிவகுக்கும்.
நம்மிடம் திறமையான பல கலைஞர்கள், நல்ல படைப்பாளிகள், நடிகர்கள் உள்ளனர். அவர்களை வைத்து சர்வதேச திரைப்படங்களை உருவாக்க முடியும். அதனால், படங்களை மொழிவாரியாக பிரித்து ஒப்பிட வேண்டாம் என்பதை வேண்டுகோளாக வைக்கிறேன்” என அந்த பேட்டியில் கூறியுள்ள ரகுல் பிரீத் சிங்.