சினிமா
சிபி, பிரதீப் எல்லாம் வேண்டாம்; ஜெய்பீம் இயக்குநருக்கு டிக் அடித்த ரஜினிகாந்த்!

லைகா நிறுவனர் சுபாஷ்கரன் பிறந்தநாளை முன்னிட்டு கடந்த ஆண்டு பொன்னியின் செல்வன் பட அப்டேட்களாக குவிந்தன. இந்நிலையில், இந்த ஆண்டு அவரது பிறந்தநாளை முன்னிட்டு பொன்னியின் செல்வன் ரிலீஸ் தேதி ஏப்ரல் 28 என்பதை உறுதி செய்த லைகா நிறுவனம், மேலும் ஒரு பெரிய அப்டேட்டையும் கொடுத்துள்ளது.
அஜித்தின் ஏகே 62வை பற்றிய அப்டேட்டாகத்தான் இருக்கும் என அஜித் ரசிகர்கள் நம்பி ஏமாந்துப் போன நிலையில், ரஜினிகாந்த் ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தும்படியான சூப்பரான அப்டேட்டை லைகா நிறுவனம் வெளியிட்டுள்ளது.

#image_title
ஏற்கனவே லைகா தயாரிப்பில் 2.0, தர்பார் என ஃபர்னிச்சர்கள் உடைக்கப்பட்டாலும், மீண்டும் லால் சலாம் மற்றும் தலைவர் 170 என ரஜினிகாந்த் படங்களை தயாரிக்க லைகா நிறுவனம் முன் வந்துள்ளது.
சூர்யாவின் ஜெய்பீம் படத்தை இயக்கிய கூட்டத்தில் ஒருவன் பட இயக்குநர் த.செ. ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்தின் 170வது படம் உருவாக உள்ளது. மேலும், இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்க உள்ளார் என்றும் 2024ம் ஆண்டு படம் வெளியாகும் என அனைத்து அப்டேட்களையும் லைகா நிறுவனம் வெளியிட்டுள்ளது.
முன்னதாக தலைவர் 170 படத்தை டான் பட இயக்குநர் சிபி சக்கரவர்த்தி இயக்கப் போவதாகவும், லவ் டுடே இயக்குநர் பிரதீப் ரங்கநாதன் இயக்கப் போவதாகவும், லோகேஷ் கனகராஜ் இயக்கப் போவதாகவும் ஏகப்பட்ட தகவல்கள் வெளியான நிலையில், தலைவர் 170 படத்தை இயக்கும் வாய்ப்பு ஜெய்பீம் இயக்குநருக்கு கிடைத்துள்ளது.