இந்தியா
போதைப்பொருள் பயன்படுத்திய நடிகைகள்…ஆய்வில் அம்பலம்…விரைவில் கைது.?.

2020ம் ஆண்டு பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலை செய்து கொண்டபோது, அவர் போதை பொருள் பயன்படுத்தியதாக சர்ச்சை எழுந்தது. எனவே, இந்தியா முழுவதும் போதைப்பொருட்கள் பயன்படுத்தும் நடிகர், நடிகைகளை கையும் களவுமாக பிடிக்கும் வேலையில் போலீசார் இறங்கினர். இதில், நடிகை நிக்கி கல்ராணியின் தங்கை சஞ்சனா கல்ராணி மற்றும் ராகினி திவேதி உள்ளிட்ட பலரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

பல முறை ஜாமின் விண்ணப்பித்தும் அவர்களுக்கு ஜாமின் வழங்கப்படவில்லை. மேலும், அவர்கள் போதைப்பொருள் பயன்படுத்தியதை நிரூபிக்கும் வேலையில் இறங்கினார். ஒருபக்கம் அவர்கள் ஜாமினில் விடுவிக்கப்பட்டனர்.
இந்நிலையில், போதைப்பொருள் வழக்கில் கைதான நடிகைகள் ராகினி திவேதி, சஞ்சனா கல்ராணி ஆகியோர் போதைப் பொருள் பயன்படுத்தியிருப்பது உறுதியாகியுள்ளது. நடிகைகளின் தலைமுடி மாதிரியை ஆய்வு செய்ததில் போதைப் பொருள் பயன்படுத்தியிருப்பது உறுதியாகியுள்ளது. எனவே, விரைவில் அவர்கள் கைது செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.








