சினிமா செய்திகள்
மெல்போர்ன் திரைப்பட விழா- சிறந்த நடிகராக சூர்யா பெயர் பரிந்துரை!

மெல்போர்ன் நகரில் நடைபெற உள்ள இந்தியத் திரைப்படங்களுக்கான விருதுகள் விழாவில் நடிகர் சூர்யாவின் பெயர் சிறந்த நடிகருக்கான பட்டியலில் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் நடைபெற உள்ள திரை விருதுகளில் சிறந்த இந்தியப் படங்கள், நடிகர்கள் உள்ளிட்ட சினிமா சார்ந்து விருதுகள் வழங்கப்படும். இதில் தமிழ் சினிமா சார்பில் சேத்து மான், நசீர் ஆகியப் படங்கள் சிறந்த படத்துக்கான விருதுக்காகப் பரிந்துரை செய்யப்பட்டுள்ளன.
இதேபோல் மலையாள சினிமா சார்பில் ‘தி க்ரேட் இந்தியன் கிட்சன்’ என்ற படம் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இதே போல், சிறந்த இயக்குநர்களுக்கான விருது பட்டியலில் ‘சூரரைப் போற்று’ திரைப்பட இயக்குநர் சுதா கொங்கராவின் பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. அதேபோல், சிறந்த நடிகருக்கான விருதுப் பட்டியலில் அதே ‘சூரரைப் போற்று’ படத்தில் நடித்ததற்கான நடிகர் சூர்யாவின் பெயர் இடம் பெற்றுள்ளது.
இந்த ஆண்டில் இருந்து வெப் சீரிஸ், ஓடிடி படங்களும் விருது பரிந்துரைகளில் இடம் பெற அனுமதிக்கப்பட்டுள்ளது. இதனால் சிறந்த நடிகைக்கான பட்டியலில் ‘தி பேமிலி மேன்’ சீரிஸில் நடித்ததற்காக சமந்தாவின் பெயர் இடம் பெற்றுள்ளது.
















