சினிமா செய்திகள்
நடிகர் பிரபுவுக்கு என்ன ஆச்சு? மருத்துவமனையில் திடீர் அனுமதி!

பிரபல நடிகர் பிரபுவுக்கு ஏற்பட்ட உடல்நலக் குறைவு காரணமாக அவர் சென்னையில் உள்ள மெட்வே மருத்துவமனையில் திங்கள் இரவு அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

#image_title
நடிகர் திலகம் சிவாஜியின் மகனும் பிரபல நடிகருமான பிரபு நூற்றுக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். அவருக்கு சிறுநீரகத்தில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக உடல்நலக் குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக அவர் அனுமதிக்கப்பட்டுள்ள கோடம்பாக்கத்தில் உள்ள மெட்வே மருத்துவமனை நிர்வாகம் பத்திரிக்கை செய்தி ஒன்று வெளியிட்டுள்ளது.
அதில், சென்னை, கோடம்பாக்கத்தில் உள்ள மெட்வே மருத்துவமனையில், பிரபல நடிகர் பிரபு 20-ஆம் தேதி இரவு சிறுநீரகப் பிரச்சனை காரணமாக அனுமதிக்கப்பட்டார். அவருக்கு சிறுநீரகத்தில் கல் அடைப்பு இருந்தது கண்டறியப்பட்டு, யூரித்ரோஸ்கோப்பி லேசர் அறுவை சிகிச்சை மூலம் சிறுநீரகக் கற்கள் அகற்றப்பட்டன.
அவர் தற்போது பூரண உடல் நலத்துடன் இருக்கிறார். அறுவை சிகிச்சைக்கு பிந்தைய – பொதுவான மருத்துவ சோதனைகளுக்குப் பிறகு, ஓரிரு நாளில் அவர் வீடு திரும்புவார் என்று கூறப்பட்டுள்ளது.














