சினிமா
மனோபாலா உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்திய விஜய்.. கெட்டப் புதுசா இருக்கே!

மறைந்த நடிகர் மனோபாலாவின் திரு உடலுக்கு நேரில் வந்து நடிகர் விஜய் மாலை அணிவித்து மரியாதை செய்துள்ள காட்சிகள் தற்போது வைரலாகி வருகின்றன.
இயக்குநர், நடிகர், தயாரிப்பாளரை எல்லாம் கடந்து நல்ல மனிதராக மனோபாலா இருந்ததால் தான் இத்தனை பிரபலங்கள் அவரது இறப்பு செய்தி அறிந்ததும் ஓடோடி வந்து இறுதி மரியாதை செலுத்தி வருகின்றனர்.

#image_title
இயக்குநர்கள் மணிரத்னம், கே.எஸ். ரவிக்குமார், பி. வாசு, ஏ.எல். விஜய், பேரரசு, சேரன் உள்ளிட்ட பலர் காலை முதலே வந்து மனோபாலாவின் உடலுக்கு அஞ்சலி செலுத்தி சென்றனர்.
நடிகர்கள் சிவகுமார், ஆர்யா, சித்தார்த், ரமேஷ் கண்ணா, மதன் பாப் உள்ளிட்ட பலர் நேரில் வந்து அஞ்சலி செலுத்தி சென்றனர்.
இந்நிலையில், நடிகர் விஜய் வெள்ளை நிற சட்டை மற்றும் வேட்டி அணிந்து கொண்டு ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்து அப்படியே வந்து அஞ்சலி செலுத்தி உள்ளார்.
லியோ படத்தில் சால்ட் அண்ட் பெப்பர் ஹேர் ஸ்டைல் வைத்திருந்த நிலையில், தற்போது கருகருவென அவரது ஹேர்ஸ்டைல் இருப்பதை பார்த்த ரசிகர்கள் லியோ படத்தில் வேறலெவல் சம்பவம் காத்திருக்கு என பதிவிட்டு வருகின்றனர்.
#ThalapathyVijay paid his last respects to actor Manobala 🥹🙏🏻pic.twitter.com/CKi7ISfwVr
— KARTHIK DP (@dp_karthik) May 3, 2023
https://platform.twitter.com/widgets.js
நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன், கார்த்தி, விஷால், சத்யராஜ் உள்ளிட்ட பலர் சமூக வலைதளங்கள் வாயிலாக இரங்கல் தெரிவித்து வந்த நிலையில், நடிகர் விஜய் நேரில் வந்து அஞ்சலி செலுத்தி உள்ளார்.
தலைவா, பிகில் உள்ளிட்ட படங்களில் நடிகர் விஜய்யுடன் இணைந்து மனோபாலா நடித்திருந்தார். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் லியோ படத்திலும் மனோபாலா நடித்துள்ளார். அவரது போர்ஷன்களுக்கு பல படங்களில் டப்பிங் உள்ளிட்டவை எப்படி நடக்கப் போகிறதோ என்கிற கேள்விகளும் எழுந்துள்ளன.