Connect with us

தமிழ்நாடு

ஆவின் நெய், தயிர் விலை கடும் உயர்வு: அதிர்ச்சியில் பொதுமக்கள்!

Published

on

ஆவினில் விற்பனை செய்யப்படும் தயிர், நெய் உள்பட ஒரு சில பொருட்களின் விலை கடும் உயர்வு பெற்று உள்ளதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

தமிழக முதல்வராக மு க ஸ்டாலின் பதவியேற்றவுடன் பால் விலை குறைக்கப்பட்டது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். இந்த நிலையில் தற்போது திடீரென ஆவின் தயிர் நெய் உள்பட ஒரு சில பொருட்களின் விலை உயர்ந்துள்ளதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

ஆவினில் புதிய விலை பட்டியல்:

27 ரூபாயாக இருந்த அரைக்கிலோ தயிர், தற்போது 30 ரூபாய்

14 ரூபாயாக இருந்த 200 கிராம் தயிர் 15 ரூபாய்

515 ரூபாயாக இருந்த ஒரு லிட்டர் நெய் (ஜார்) 535 ரூபாய்

265 ரூபாயாக இருந்த அரை லிட்டர் நெய் (ஜார்) 275 ரூபாய்

115 ரூபாயாக இருந்த 200 கிராம் நெய் (ஜார்) 120 ரூபாய்

2550 ரூபாயாக இருந்த 5 லிட்டர் நெய் (ஜார்) தற்போது 2650 ரூபாய்

8350 ரூபாயாக இருந்த நெய் (டின்) 8650 ரூபாய்

80 ரூபாயாக இருந்த 200 கிராம் பாதாம் பவுடர் 100 ரூபாய்

இந்த விலை ஏற்றத்திற்கு பால் முகவர்கள் சங்கம் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது. இதுகுறித்து பால் முகவர்கள் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

பால் கொள்முதல் மற்றும் மூலப்பொருட்களின் விலை உயர்வு என்கிற பொய்யான காரணத்தை கூறி கடந்த வாரம் தனியார் நிறுவனங்கள் பால், தயிர் விற்பனை விலையை உயர்த்திய நிலையில் தற்போது தமிழக அரசின் பொதுத்துறை கூட்டுறவு நிறுவனமான ஆவினில் நெய், பாதாம் பால் பவுடர், SMP (Skimmed Milk Powder), தயிர், ஐஸ்கிரீம் உள்ளிட்ட பால் பொருட்களின் விற்பனை விலை குறிப்பாக ஆவின் நெய் லிட்டருக்கு 30.00ரூபாய் வரையிலும், SMP (Skimmed Milk Powder) 1Kg 40.00ரூபாய், பாதாம் பால் பவுடர் 1Kg 100.00ரூபாய், தயிர் லிட்டருக்கு 6.00ரூபாய் என கடுமையாக விற்பனை விலை உயர்த்தப்பட்டு புதிய விற்பனை விலை இன்று முதல் அமுலுக்கு வந்துள்ளது.

வழக்கமாக பால் மற்றும் பால் பொருட்களின் விற்பனை விலை உயர்வு தொடர்பாக ஒரு வார காலத்திற்கு முன் பால் முகவர்களுக்கு சுற்றறிக்கை வழங்கி அமுல்படுத்தப்பட்டு வந்த நிலையில் தற்போதைய விற்பனை விலை உயர்வு இன்று (04.03.2022) முதல் அமுலுக்கு வருகிறது என்கிற தகவலை 24 மணி நேரத்திற்கு முன்னதாக அதாவது நேற்றைய (03.03.2022) தினம் ஆவின் விற்பனை பிரிவு பொதுமேலாளர் அவர்களால் வெளியிடப்பட்டிருப்பதை தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் வன்மையாகக் கண்டிக்கிறது.

ஏற்கனவே தனியார் பால் நிறுவனங்களுக்கு சாதகமாக ஆவின் பால் விற்பனையை குறைக்க செயற்கையான பால் தட்டுப்பாட்டை ஆவின் அதிகாரிகள் உருவாக்கி வரும் சூழ்நிலையில் தற்போது ஆவின் பால் பொருட்களின் கடுமையான விற்பனை விலை உயர்வு அதனை உறுதி செய்வதாக உள்ளது. எனவே தமிழக முதல்வர் அவர்கள் ஆவின் பால் பொருட்கள் விற்பனை விலை உயர்வு விவகாரத்தில் உடனடியாக தலையிட்டு பொதுமக்கள் தலையில் ஆவின் நிர்வாகம் சுமத்தியிருக்கும் விற்பனை விலை உயர்வை உடனடியாக திரும்பப் பெற உத்தரவிடுவதோடு, ஆவின் பால் தட்டுப்பாடின்றி விநியோகம் செய்யவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் சார்பில் வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறோம்.

 

 

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

சினிமா21 மணி நேரங்கள் ago

ரூ.100 கோடி சொத்து முரண்பாடு: விஜய் வேட்புமனு விவகாரம் குறித்து நீதிமன்றம் முக்கிய கருத்து!

வணிகம்21 மணி நேரங்கள் ago

டிஜிட்டல் தங்கம் vs நகைக் கடை தங்கம்: எது பாதுகாப்பான முதலீடு? முழு விவரம்!

வணிகம்21 மணி நேரங்கள் ago

BHEL பங்கு 52 வார உச்சம்: ரூ.75,000 கோடி புதிய ஆர்டர்களால் நிறுவனம் பறக்கிறது!

வணிகம்23 மணி நேரங்கள் ago

SGB 2020-21 முதலீட்டாளர்களுக்கு நல்ல செய்தி: இன்று முதல் முன்கூட்டியே பணம் பெறலாம் – முழு விவரம்!

ஆன்மீகம்23 மணி நேரங்கள் ago

சுக்கிரன் ரிஷபத்தில் பிரவேசம் 2026: மாளவ்ய யோகம் உருவாகிறது – இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்ட வெள்ளம்!

வேலைவாய்ப்பு23 மணி நேரங்கள் ago

திருச்சி தேசிய வாழை ஆராய்ச்சி நிறுவனம் வேலைவாய்ப்பு 2026: ரூ.30,000 சம்பளத்தில் Young Professional பணியிடம்!

வணிகம்24 மணி நேரங்கள் ago

PNB FD வட்டி விகிதம் 2026: 3 ஆண்டில் ரூ.1 லட்சம் எவ்வளவு ஆகும்? முழு விவரம்!

வணிகம்24 மணி நேரங்கள் ago

டி-மார்ட் ஷாப்பிங்கில் பணம் சேமிக்க 5 சுலப டிப்ஸ் – தேவையற்ற செலவை தவிர்க்க எப்படி?

ஆன்மீகம்1 நாள் ago

ஹன்ஸ் ராஜயோகம் 2026: குரு கடக ராசி பிரவேசம் – 3 ராசிகளுக்கு அதிர்ஷ்ட காலம்!

வணிகம்1 நாள் ago

ஏர்டெல் ப்ரீபெய்ட் ரீசார்ஜ் விலை உயர்வு: ரூ.859 திட்டம் ரூ.899 ஆக மாற்றம்!

ஆன்மீகம்5 நாட்கள் ago

அக்ஷய திருதியை 2026: தங்கம் விலை ரூ.4,000 வரை உயரும்? வாங்க சிறந்த நேரம் & முழு விவரம்!

இந்தியா6 நாட்கள் ago

பூத் ஸ்லிப் கைக்கு வரவில்லையா? இணையத்தில் டவுன்லோடு செய்வது எப்படி?

வேலைவாய்ப்பு6 நாட்கள் ago

திருச்சி தேசிய வாழை ஆராய்ச்சி மையத்தில் வேலைவாய்ப்பு 2026: டிகிரி முடித்தவர்களுக்கு 16 அப்ரண்டிஸ் பணியிடங்கள்!

இந்தியா5 நாட்கள் ago

Back Button Hijacking நடைமுறையைக் கட்டுப்படுத்த கூகுள் நிறுவனம் தனது கொள்கைகளை விரிவாக்கியுள்ளது.

இந்தியா5 நாட்கள் ago

மக்களவை தொகுதிகள் மறுவரையறை மசோதா – பர பர அரசியல் நிகழ்வுகள்

வணிகம்4 நாட்கள் ago

தபால் நிலைய RD திட்டம் 2026: ₹100 முதலீட்டில் தொடங்கி 6.7% வட்டி – கடன் வசதி உடன் சிறந்த சேமிப்பு திட்டம்!

இந்தியா4 நாட்கள் ago

ஒரு குடும்பத்தின் நிதி நிலைமை சீரழிவதற்கான மிக முதன்மையான பத்துக் காரணங்கள்……

இந்தியா4 நாட்கள் ago

தோ்தல் அலுவலா்களால் பாழாகும் பள்ளி சுவா்கள்?

வணிகம்5 நாட்கள் ago

8வது ஊதியக் குழு 2026: ரூ.69,000 குறைந்தபட்ச சம்பளம், OPS மீண்டும் – மத்திய அரசு ஊழியர்களுக்கு பெரிய அப்டேட்!

வணிகம்6 நாட்கள் ago

8வது ஊதிய கமிஷன்: குறைந்தபட்ச சம்பளம் ரூ.69,000 ஆக உயருமா? முக்கிய பரிந்துரைகள் வெளியீடு!

Translate »
Wie kann ich erkennen, ob ein rinderhaut kauknochen für meinen hund geeignet ist ?. Optimer dine opgaver nu. İhtiyacınıza uygun forklift kiralama hizmetleri için bizimle iletişime geçebilir ve size en uygun çözümleri keşfedebilirsiniz.