தமிழ்நாடு
பதவியேற்ற அடுத்த நிமிடமே ராஜினாமா செய்ய சொன்ன திருமாவளவன்: இதுதான் காரணம்!

பதவியேற்ற சில நிமிடங்களில் உள்ளாட்சி பதவிகளை ராஜினாமா செய்யச் சொல்லி விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் கோரிக்கை விடுத்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திமுக கூட்டணியில் உள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் திடீரென திமுக வேட்பாளர்கள் போட்டியிட்டு வெற்றி பெற்று உள்ளனர். இதனால் திமுக விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
இந்த நிலையில் தலைமையின் உத்தரவை மீறி கூட்டணி கட்சிகளுக்கு என ஒதுக்கப்பட்ட இடங்களில் நின்று வெற்றி பெற்ற திமுக வேட்பாளர்கள் உடனடியாக ராஜினாமா செய்ய வேண்டும் என்றும் திமுக தலைவர் முக ஸ்டாலின் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் திருமாவளவன் கோரிக்கை விடுத்துள்ளார் .
மேலும் கூட்டணி தர்மத்தை காத்திட வேண்டும் என்று கூறியுள்ள விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் கடலூரில் மேயர் பதவியை தங்கள் கட்சிக்கு ஒதுக்கப்படவில்லை என்றும் அந்தப் பதவி கிடைத்து இருந்தால் விடுதலை சிறுத்தைகள் கட்சி மகிழ்ச்சி அடைந்து இருக்கும் என்று கூறினார். இருப்பினும் துணை மேயர் பதவி தந்திருக்கிறார்கள் அதற்கு நன்றி என்றும் அவர் தெரிவித்தார்.
திமுக கூட்டணி கட்சிக்கு பதவி கொடுப்பது போல கொடுத்துக்கொண்டு திடீரென அந்த கட்சியின் பதவியை பறித்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


















