இந்தியா
ஜூலை 1 முதல் தத்கால் டிக்கெட் பெற ஆதார் கட்டாயம்! ஐஆர்சிடிசியில் இணைப்பது எப்படி?

இந்திய ரயில்வே துறையின் புதிய அறிவிப்பின்படி, வரும் ஜூலை 1, 2025 முதல் தத்கால் ரயில்வழிப் பயண டிக்கெட் பெற, பயணிகள் தங்களது IRCTC கணக்கை ஆதார் அங்கீகரிக்கப் போதும் அவசியம். இந்த நடைமுறை IRCTC வலைதளம் மற்றும் மொபைல் ஆப் வாயிலாக டிக்கெட் பதிவுகளுக்கு மட்டுமல்லாமல், பொதுமக்கள் பயன்பாட்டிற்கான ரயில்வே பாசஞ்சர் ரிசர்வேஷன் சிஸ்டம் (PRS) மற்றும் அங்கீகரிக்கப்பட்ட முகவர்கள் மூலமாகவும் அமல்படுத்தப்படும்.
இது குறித்து ஜூன் 10-ஆம் தேதி வெளியிடப்பட்ட சுற்றறிக்கையில், ஜூலை 15 முதல் OTP அடிப்படையிலான ஆதார் உறுதிப்படுத்தல் கட்டாயமாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, தத்கால் டிக்கெட் பெற நீங்கள் முதலில் உங்கள் IRCTC கணக்கில் ஆதார் விவரங்களை இணைத்து, அதன் மூலம் வழங்கப்படும் OTP-யை உறுதி செய்ய வேண்டும்.
இந்த புதிய நடைமுறை பயணிகளுக்கு பாதுகாப்பு மற்றும் சீரான அனுபவம் வழங்கும் நோக்கில் அமல்படுத்தப்படுகிறது.
✅ ஆதார் அங்கீகாரம் செய்வது எப்படி? (படிப்படியாக விளக்கம்):
முதலில் உங்கள் IRCTC கணக்கில் Sign in செய்யவும்.
‘My Account’ பகுதியில் சென்று ‘Authenticate User’ என்பதை தேர்வு செய்யவும்.
அங்கே உங்கள் பயனர் விவரங்கள் தானாகவே தோன்றும்.
இப்போது உங்கள் ஆதார் எண் அல்லது Virtual ID ஐ உள்ளீடு செய்து ‘Verify Details and Receive OTP’ என்பதை கிளிக் செய்யவும்.
உங்கள் ஆதாருடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணிற்கு OTP வரும், அதை உள்ளீடு செய்யவும்.
அனுமதி கொடுக்கும் பெட்டியில் குறி வைத்து, ‘Submit’ கிளிக் செய்யவும்.
OTP சரியாக இருந்தால், அங்கீகாரம் வெற்றிகரமாக நடைபெற்றது என்ற செய்தி காட்டப்படும்.
தவறான விவரம் இருந்தால், எச்சரிக்கை செய்தி வரும். அப்போது மீண்டும் சரிபார்த்து முயற்சி செய்ய வேண்டும்.
இந்த புதிய கட்டாய விதிமுறைகள், ரயில்வே பயண அனுபவத்தை மேம்படுத்தவும், குற்றச்செயல்களை தடுக்கும் விதமாக அமைகின்றன. எனவே, உங்கள் IRCTC கணக்கை உடனே ஆதாருடன் இணைத்து உறுதி செய்து கொள்ளவும்.
ஜூலை 1 முதல் இது இல்லாமல் தத்கால் டிக்கெட் பெற முடியாது என்பதை பயணிகள் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டியது மிக முக்கியம்.















