வணிகம்
இந்தியாவின் மிகப்பெரிய மின்னணு பொருட்கள் உற்பத்தி செய்யும் மாநிலமாக மாறி வரும் தமிழ்நாடு!

இந்தியாவின் மிகப்பெரிய மின்னணு பொருட்கள் உற்பத்தி செய்யும் மாநிலமாகத் தமிழ்நாடு மாறும் என மாநில தொழில்துறை செயலாளர் எஸ்.கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் இப்போது எல்க்ட்ரானிஸ் தொழிற்சாலைகளின் வளர்ச்சி 14 சதவீதமாக உள்ளது. இந்தியாவின் ஒட்டுமொத்த எல்க்டாகிக்ஸ் உற்பத்தியில் இது வேகமாக வளர்ந்து 25 முதல் 30 சதவிகிதமாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.
100 பில்லியன் டாலர் எலக்ட்ரானிக்ஸ் சிஸ்டம் வடிவமைப்பு மற்றும் உற்பத்தித் தொழிலை அடைய மாநிலம் நன்கு நிலைநிறுத்தப்பட்டுள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
சென்னை, ஓசூர், கோயம்புத்தூர், திருச்சி உள்ளிட்ட நகரங்களில் எலக்ட்ரானிக்ஸ் தொழிற்சாலைகளைத் தொடங்க பல்வேறு வசதிகளைத் தமிழ்நாடு அரசு ஏற்பாடு செய்து வருகிறது.

ஃபாக்ஸ்கான் சென்னை
சென்னையிலிருந்து ஃபாக்ஸ்கான், பேகட்ரான் நிறுவனங்கள் ஐபோன் உற்பத்தி செய்து வருகின்றன. சால் காம்ப் நிறுவனம் ஐபோன் சார்ஜரை தயாரித்து வருகிறது.

TATA Electronics
ஓசூரில் தொடங்கப்படும் டாடா எலக்ட்ரானிக்ஸ் தொழிற்சாலையில் ஐபோன் உற்பத்தி தொடங்கப்பட்டுள்ளது. விரைவில் இன்னும் பல்வேறு எலக்ட்ரானிக்ஸ் நிறுவனங்கள் தங்களது தொழிற்சாலையைச் சென்னையில் தொடங்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.







