சினிமா செய்திகள்
நடிகை தமன்னாவுக்கு விரைவில் திருமணமா? உண்மை என்ன?

தமிழ், தெலுங்கு திரைப்படங்களில் முன்னணி நாயகியாக இருந்து வந்த நடிகை தமன்னா.
சமீப காலமாக தமன்னாவின் நடிப்பில் எந்த ஒரு திரைப்படமும் வெளியாகவில்லை. எனவே தமன்னா விரைவில் திருமணம் செய்துகொள்ள உள்ளா என தகவல்கள் வெளியாகி வருகின்றன.
மேலும் மும்பையைச் சேர்ந்த தொழில் அதிபர் ஒருவரை தமன்னா விரைவில் திருமணம் செய்துகொள்ள உள்ளதாக கூறப்படுகிறது.

2020-ம் ஆண்டுக்குப் பிறகு தமன்னா எந்த ஒரு தமிழ் படத்திலும் நடிக்கவில்லை.
ஆனால் தெலுங்கு, இந்தி, மலையாளம் படங்களில் தமன்னா தொடர்ந்து நடித்துத்தான் வருகிறார்.

Tamanna Bhatia Latest Cute HD Stills
2020-ம் ஆண்டு சரிலேரு நீகேவாரு, 2021-ம் ஆண்டு செட்டிமார், மேஸ்ட்ரோ, 2022-ம் ஆண்டு கஹானி, எஃப்3, பாப்லி பவுன்சர், பிளான் ஏ பிளான் பி படங்களில் நடித்துள்ளார்.
மேலும் 2023-ம் ஆண்டு தமன்னா நடிப்பில் போலோ ஷங்கர், போலே சுடியான், குருதுண்டா சேதாகலம், பாந்ரா ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

இதனை வைத்து பார்க்கும் போது தமன்னாவுக்கு இப்போதைக்குத் திருமணம் இல்லை என்பது உறுதியாகத் தெரிகிறது.






















