சினிமா செய்திகள்
மருத்துவமனையில் அபாஸ்.. ரசிகர்கள் ஷாக்!

பிரபல நடிகர் அபாஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது அவரது ரசிகர்களிடையில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
1996-ம் ஆண்டு காதல் தேசம் படம் மூலம் தமிழ் படங்களில் அறிமுகமானவர் அபாஸ்.
பெங்களூருவை பூர்வீகமாகக் கொண்ட அபாஸ், தமிழ், கன்னடா, இந்தி, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் பல்வேறு வெற்றிப்படங்களில் நடித்துள்ளார்.
கடைசியாக 2014-ம் ஆண்டு வெளியான ராமானுஜம் என்ற படத்தில் நடித்தார். அதன் பின்பு தமிழ் படங்களில் எதிலும் நடிக்கவில்லை.
இப்போது நியூசிலாந்தில் பெட்ரோல் பங்க், சைக்கிள் மெக்கானிக் மற்றும் கட்டுமான துறையில் பணியாற்றி வருகிறார்.
அவருக்கு நீண்ட காலமாகக் கால் முட்டியிலிருந்து ஏற்பட்டு இருந்த வலியை தொடர்ந்து, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த அபாஸ், அதற்காக அறுவை சிகிச்சை செய்துள்ளதாகப் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
அபாஸ் தமிழ் படங்களில் இப்போது நடிக்கவில்லை என்றாலும் 90’ஸ் கிட்ஸூக்கு பிடித்தமான ஒரு நடிகராக இருந்து வருகிறார்.