தமிழ்நாடு
தமிழக முதல்வரை திடீரென சந்தித்த அன்புமணி ராமதாஸ்: என்ன காரணம்?

தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்களை திடீரென பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் சந்தித்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சற்று முன்னர் சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் முக ஸ்டாலின் அவர்களை பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் சந்தித்துள்ளார். இந்த சந்திப்பின்போது பாமக தலைவர் ஜிகே மணி உள்ளிட்ட பாமகவின் பிரபலங்கள் இருந்தார்கள் என செய்திகள் வெளியாகியுள்ளது .
கடந்த சில நாட்களுக்கு முன்னர் சுப்ரீம் கோர்ட்டில் வன்னியர்களுக்கான 7.5 சதவீத உள் இட ஒதுக்கீடு செல்லாது என தீர்ப்பளிக்கப்பட்டது. இதனை அடுத்து அடுத்த கட்ட நடவடிக்கைக்காக தமிழக முதல்வரை பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் சந்தித்திருக்கலாம் என தெரிகிறது .
ஏற்கனவே வன்னியர்களுக்கான 7.5 சதவீத இட ஒதுக்கீட்டை பெற்றுத்தர தமிழக அரசு தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாமக தரப்பில் வேண்டுகோள் வைக்கப்பட்ட நிலையில் தற்போது தமிழக முதல்வரை நேரில் பாமக பிரமுகர்கள் சந்தித்து உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.





















