தமிழ்நாடு
ராஜேந்திர பாலாஜிக்கு அடைக்கலம் கொடுத்த பாஜக பிரமுகர் கைது!

முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கடந்த 20 நாட்களுக்கும் மேலாக தலைமறைவாக இருந்த நிலையில் கர்நாடக மாநிலத்தில் கைது செய்யப்பட்டார் என்ற செய்தி ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் அவருக்கு அடைக்கலம் கொடுத்த பாஜக பிரமுகர் கைது செய்யப்பட்டுள்ளதாக வெளிவந்திருக்கும் செய்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மூன்று கோடி ரூபாய் மோசடி செய்ததாக எழுந்த புகாரை அடுத்து அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த நிலையில் அவரை கைது செய்ய தனிப்படைகள் அமைக்கப்பட்டு இருந்த நிலையில் அவர் தலைமறைவாகி இருந்தார் என்பதும் கடந்த 20 நாட்களாக சென்னை கோவை திருச்சி பெங்களூர் கேரளா உள்ளிட்ட பகுதிகளில் அவரை தேடி வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் இன்று மதியம் முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி கர்நாடக மாநிலம் ஹசன் என்ற பகுதியில் தனிப்படை போலீசார் கைது செய்தனர். அவரை அங்குள்ள நீதிமன்றத்தில் ஆஜர் செய்து விட்டு அதன் பின்னர் சென்னைக்கு அழைத்து வர திட்டமிடப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் ராஜேந்திர பாலாஜிக்கு அடைக்கலம் கொடுத்ததாக கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட பாஜக செயலாளர் ராமகிருஷ்ணன் உள்ளிட்ட 3 பேரையும் போலீசார் கைது செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ராமகிருஷ்ணன் மற்றும் ராமகிருஷ்ணனின் உறவினர் நாகேஷ், விருதுநகர் மாவட்ட அதிமுக பிரமுகர் ஆகிய மூவரும் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர்களிடமும் விசாரணை நடத்தி வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் ராஜேந்திரபாலாஜிக்கு இரண்டு முன்னாள் அதிமுக அமைச்சர்களும் உதவி செய்துள்ளதாகவும் அவர்களுன்ம் கைது செய்யப்பட வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.






