தமிழ்நாடு
ஞாயிறு இரவு ஊரடங்கின்போது எதற்கெல்லாம் அனுமதி?

தமிழகத்தில் நாளை முதல் இரவு நேர ஊரடங்கு, ஞாயிறன்று முழு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது என்று வெளியான செய்தியை ஏற்கனவே பார்த்தோம். மேலும் பகல் நேர ஊரடங்கின்போது என்னென்ன கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருந்தது என்பதையும் விரிவாக பார்த்தோம்.
இந்த நிலையில் ஞாயிறன்று முழு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருக்கும் நிலையில் முழுநேர ஊரடங்கின்போது எதற்கெல்லாம் அனுமதி என்பது குறித்த தகவல் தற்போது வெளிவந்துள்ளது.
இரவு நேர ஊரடங்கின்போது பொது மற்றும் தனியார் போக்குவரத்து சேவைகளுக்கும் அனுமதி உண்டு என்றும் ஆனால் அதே நேரத்தில் போக்குவரத்து வாகனங்களை இயக்குபவர் 2 டோஸ் தடுப்பூசி செலுத்தி இருக்க வேண்டும் என்றும் கொரோனா வைரஸ் நெறிமுறைகளைப் பின்பற்ற வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
அத்தியாவசிய பணிகளான பால் வினியோகம், பத்திரிகை, ஆம்புலன்ஸ், மருந்தகங்கள் மற்றும் அமரர் ஊர்தி சேவைகள், ஏடிஎம் மையங்கள் ஆகியவை செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளன
முழு நேர ஊரடங்கின்போது பெட்ரோல், டீசல் பங்குகள் 24 மணி நேரமும் செயல்பட அனுமதி உண்டு. பெட்ரோல் நிலைய ஊழியர்கள் கொரோனா நெறிமுறைகளை கடைபிடிக்க வேண்டும்.
முழுநேர ஊரடங்கின்போது உற்பத்தி சாலைகள், ஐடி நிறுவனங்கள் செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளன. ஆனால் அதேநேரத்தில் அந்நிறுவனங்களில் பணிபுரிபவர்கள் அடையாள அட்டையுடன் வெளியே வரவேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.







