உலகம்
டெஸ்லா நிறுவனத்தின் தலைமை பொறுப்பிலும் தமிழர்: குவியும் வாழ்த்துக்கள்!

கூகுள், ட்விட்டர், ஆப்பிள், மைக்ரோசாப்ட் உள்ளிட்ட பல முன்னணி நிறுவனங்களில் இந்தியர்களும் குறிப்பாக தமிழர்கள் உயர்பதவியில் இருக்கும் நிலையில் தற்போது உலகிலேயே நம்பர் 1 கோடீஸ்வரரான டெஸ்லாவின் நிறுவனத்தின் முக்கிய பொறுப்பில் தமிழர் ஒருவர் தேர்வு செய்யப்பட்டிருப்பது பெருமைக்குரியதாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
கூகுள் நிறுவனத்தின் சிஇஓவாக பல ஆண்டுகளாக தமிழகத்தை சேர்ந்த சுந்தர் பிச்சை இருந்து வருகிறார் என்பது தெரிந்ததே. அதேபோல் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் தலைவராக சத்ய நாதெள்ளா, முன்னணி ஐடி நிறுவனங்களில் ஒன்றான ஐபிஎம் சிஇஓவாக ரவிகிருஷ்ணா டுவிட்டர் நிறுவனத்தின் தலைவராக ப்ரக் அக்ராவல் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் டெஸ்லா நிறுவனத்தின் ஆட்டோ பைலட் குழு தலைவராக தமிழகத்தைச் சேர்ந்த அசோக் எல்லுசாமி என்பவர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். சென்னை கிண்டி பொறியியல் கல்லூரியில் மின்னணு மற்றும் தகவல் தொடர்பில் இளநிலை பட்டம் பெற்றுள்ள அசோக் எல்லுசமை தற்போது டெஸ்லா நிறுவனத்தின் ஆட்டோமோபைலஸ் குழு தலைவராக பதவியேற்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
உலகம் முழுவதும் இந்தியர்கள் குறிப்பாக தமிழர்கள் முன்னணி நிறுவனங்களின் முக்கிய பொறுப்புகளில் இருந்து வருவது தமிழர்களுக்கும் இந்தியர்களுக்கும் பெருமைக்குரியதாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.





















