வணிகம்
டெஸ்லாவின் முதல் இந்திய ஷோ ரூம்.. எங்கு, எப்போது?

அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு செயல்படும் உலகின் முன்னணி எலக்ட்ரிக் கார் நிறுவனமான டெஸ்லா, இந்தியாவில் தங்களது முதல் ஷோ ரூமைத் திறக்க தயாராகியுள்ளது.
மும்பையில், வருகிற செவ்வாய்க்கிழமை, டெஸ்லாவின் முதலாவது இந்திய ஷோ ரூம் திறக்கப்படும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், முதல் கார் டெலிவரி ஆகஸ்ட் மாதம் தொடங்கப்படும் என ப்ளூம்பெர்க் நிறுவனம் தெரிவித்துள்ளது.
அடுத்த வாரம் முதல், மும்பை டெஸ்லா ஷோ ரூமுக்கு வாடிக்கையாளர்கள் நேரில் சென்று கார்கள் குறித்து ஆராயலாம், ஆர்டர் செய்யலாம் மற்றும் தங்களுக்கு ஏற்ற மாதிரிகளை வடிவமைக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த ஸ்டோரில் டெஸ்லாவின் பிரபலமான மாடல்கள், ப்ரீமியம் சேவைகள் மற்றும் இந்திய சந்தைக்கு ஏற்ற தனிப்பயன் பிக்குகள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.



















