இந்தியா
டெல்லியில் 3 நாளில் 3 மடங்காக அதிகரித்த கோவிட்-19 தொற்று.. அரவிந்த் கெஜ்ரிவால் முக்கிய அறிவிப்பு!

டெல்லியில் 3 நாளில் 3 மடங்காக கோவிட்-19 தொற்று அதிகரித்துள்ளது, ஆனால் மக்கள் அச்சம் அடைய வேண்டாம் என அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளார்.
கோவி-19 தொற்று பரவல் குறித்து ஞாயிற்றுக்கிழமை பத்திரிக்கையாளர்களுக்குப் பேட்டி அளித்த டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், “டெல்லியில் திடீரென கோவிட்-19 தொற்று பாதிப்பு அதிகரித்து வருகிறது. ஆனால் மக்கள் அச்சம் அடைய வேண்டாம்.

இன்று புதிதாக 3,100 நபர்களுக்கு கோவிட்-19 தொற்று உறுதியாகும் என கணிக்கப்பட்டுள்ளது. நேற்று வரை 246 படுக்கைகள் மட்டுமே மருத்துவமனையில் நிரம்பியுள்ளது. 37,000 படுக்கைகள் கோவிட்-19 சிகிச்சைக்காகத் தயார் நிலையில் உள்ளன.
கோவிட்-19 தொற்று உறுதியானவர்களுக்குக் குறைந்த அளவில் தான் பாதிப்பு உள்ளது எனத் தரவுகள் கூறுகின்றன.” என அரவிந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளார்.
டெல்லியில் நேற்று வரை ௩௫௧ பேருக்கு ஓமிக்ரான் கோவிட்-351 தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 57 நபர்கள் தொற்று பாதிப்பிலிருந்து குணமாகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.








