இந்தியா
கைது செய்த பெண் காவலர்களை அரவணைத்து கொண்ட பிரியங்கா காந்தி!

காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி சற்றுமுன்னர் உத்தரப்பிரதேச மாநிலத்தில் கைது செய்யப்பட்ட நிலையில் தன்னை கைது செய்த பெண் காவலர்களை அரவணைத்து சென்ற பிரியங்கா காந்தியின் புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.
சமீபத்தில் போலீஸ் காவலில் இருந்த ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்ததை அடுத்து அவருடைய குடும்பத்தாரை சந்தித்து ஆறுதல் கூற காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி லக்னோ செல்ல திட்டமிட்டார்.
ஆனால் அவரை லக்னோ செல்லவிடாமல் காவல்துறையினர் தடுத்தனர். மேலும் போலீசாரின் தடையை மீறி அவர் செல்ல முயன்ற போது காவல்துறையினர் அவரை கைது செய்தனர்.
இந்த நிலையில் தன்னை கைது செய்த பெண் காவல்துறை அதிகாரிகளை தோளில் கை போட்டு அரவணைத்து கொண்டு புகைப்படத்திற்கு பிரியங்கா காந்தி போஸ் கொடுத்தார். இந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
ஏற்கனவே லக்கிம்பூர் பிரச்சனையில் கைது செய்யப்பட்ட பிரியங்கா காந்தி தற்போது மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளதை அடுத்து உத்தரப் பிரதேச மாநில அரசுக்கு காங்கிரசார் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.















