வீடியோ
வெல்வெட் நகரம் டிரைலர் ரிலீஸ்!
வரலட்சுமி சரத்குமார் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள வெல்வெட் நகரம் படத்தின் டிரைலர் வெளியாகி வைரலாகி வருகிறது.
சமீப காலமாக ஹீரோக்களுக்கு இணையாக ஹீரோயின்களும் தனியாக படம் செய்ய ஆரம்பித்து விட்டனர். நயன்தாரா போட்ட இந்த ரூட்டில் பல நாயகிகள் தற்போது பயணம் செய்து வருகின்றனர். அதில், வரலட்சுமி இணைந்துள்ளார்.
வெல்வெட் நகரம் என்ற படத்தில் வரலட்சுமி சரத்குமார் பிரஸ் ரிப்போர்ட்டராக துணிச்சல் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். நேற்று இரவு வெளியான இந்த டிரைலரின் துவக்கமே அதிமுக அரசை விமர்சிக்கும் விதமாக சர்ச்சையை கிளப்பியுள்ளது.

சமீபத்தில் குரங்கணியில் ஏற்பட்ட காட்டூத் தீயில் 27 பேர் பலியாகினர். அதனை மையமாக வைத்து, கொடைக்கானலில் உள்ள கெளஞ்சி காட்டில் தீவிபத்து ஏற்பட்டதாகவும், இது கவர்ன்மெண்ட் மற்றும் கார்ப்பரேட்டின் சதி என வரலட்சுமி கூறுகிறார்.
சர்கார் படத்தின் சர்ச்சைகள் ஓய்ந்த நிலையில், புதிய சர்ச்சையை தைரியமாக வரலட்சுமி ஆரம்பித்துள்ளார்.
மனோஜ்குமார் நடராஜன் எனும் அறிமுக இயக்குநர் இப்படத்தை இயக்கியுள்ளார். விரைவில் இந்த படம் திரைக்கு வரவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.












