தமிழ்நாடு
தமிழக அரசின் திருமண நிதி உதவித்திகை திட்டம் விதிகளில் அதிரடி மாற்றம்.. முழு விவரம்!

தமிழக அரசு பெண்களின் நலன் கருதி, ஏழைப்பெண்களின் திருமணத்துக்கு 8 கிராம் தங்கமும், 25 ஆயிரம் முதல் 50 ஆயிரம் ரூபாய் வரையில் நிதி உதவியும் வழங்கி வருகிறது.
இந்த திட்டத்தின் கீழ் உதவி பெறுபவர்களின் தகுதிகள் குறித்து தமிழக அரசு இன்று விளக்கம் ஒன்றை அளித்துள்ளது.
அதில், திருமண நிதியுதவி மற்றும் தங்கம் நாணயம் கோரி விண்ணப்பிக்கும் பெண்களின் வீட்டில் யாரும் அரசுப் பணியில் இருக்கக் கூடாது.
தமிழக அரசின் கீழ் வேறு ஏதேனும் திருமண உதவித் திட்டத்தின் கீழ் பயன்பெற்று இருக்கக் கூடாது.
மாடி வீடு, 4 சக்கர வாகனங்கள் வைத்திருந்தால் உதவித்தொகை வழங்கப்பட மாட்டாது.
ஆண்டு வருமான 72,000 ரூபாய்க்குள் இருக்க வேண்டும்.
திருமண மண்டபங்களில் திருமணம் நடத்தப்பட்டு இருக்கக் கூடாது. திருமண மண்டபத்தில் திருமணம் நடந்தால் அந்த மனு தள்ளுபடி செய்யப்படும் எனத் தமிழக அரசு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.


















