தமிழ்நாடு
தமிழ்நாடு அரசுக்கு வரும் ரூ.1 வருவாய்.. எதற்கெல்லாம் செலவு செய்யப்படுகிறது?

தமிழ்நாடு அரசுக்கு ஒரு ரூபாய் வருமானம் வருகிறது என்றால் அது எங்கு இருந்து எல்லாம் வருகிறது. மேலும் அந்த ஒரு ரூபாய் வருமானத்தைத் தமிழ்நாடு அரசு எப்படி எல்லாம் செலவு செய்கிறது என இங்கு விளக்கமாகப் பார்க்கலாம்.
தமிழ்நாடு அரசுக்கு வரும் ஒரு ரூபாய் வருமானத்தில் 44 பைசா மாநிலத்தின் வரி வருவாய் மூலமாக வருகிறது. தொடர்ந்து கடன் வருவாயாக 33 பைசா கிடைக்கிறது. வரி அல்லா வருவாய் 5 பைசா கிடைக்கிறது. மத்திய அரசி வரிகளிலிருந்து 10 பைசா கிடைக்கிறது. மத்திய அரசு திட்ட உதவிகள் மூலமாக 7 பைசா கிடைக்கிறது. கடன் மீட்பு மூலமாக 1 பைசா கிடைக்கிறது. ஆக மொத்தம் இப்படி பல்வேறு வகையிலிருந்து தமிழ்நாடு அரசுக்கு வருமானம் கிடைக்கிறது.
இப்போது தமிழ்நாடு அரசுக்கு வரும் ஒரு ரூபாய் வருமானம் எப்படிப் பிரித்து செலவு செய்யப்படுகிறது என விளக்கமாகப் பார்க்கலாம்.
தமிழ்நாடு அரசுக்கு ஒரு ரூபாய் வருமானத்தில் 30 பைசா மானியங்கள் மற்றும் நலத் திட்டப் பணிகளுக்குச் செலவு செய்யப்படுகிறது. 19 பைசா சம்பளத்திற்காகச் செலவு செய்யப்படுகிறது. கடனை திருப்பி செலுத்த 11 பைசா செலவாகிறது. வட்டிக்கு 13 பைசா செலவாகிறது. கடன் விநியோகம் திட்டங்களுக்கு 3 பைசா செலவாகிறது. முதலீட்டு 11 பைசா செலவு செய்யப்படுகிறது. ஓய்வூதியத்துக்கு 9 பைசா செலவாகிறது. செயல்பாடுகள் மற்றும் பராமரிப்பு பணிகளுக்கு 4 பைசா செலவாகிறது என பட்ஜெட் அறிக்கை மூலம் தெரியவந்துள்ளது.