சினிமா செய்திகள்
’அண்ணாத்த’ ஃபர்ஸ்ட்லுக் அப்டேட் தந்த நடிகை மீனா!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ’அண்ணாத்த’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மிக விரைவில் வெளியாகும் என நடிகை மீனா தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், ’அண்ணாத்த’ படத்தின் படப்பிடிப்பு மற்றும் டப்பிங் பணியை முடித்து விட்டு அமெரிக்காவுக்கு உடல் நல பரிசோதனை செய்து கொள்ள சென்றுள்ளார் என்பது தெரிந்ததே. இந்த நிலையில் ’அண்ணாத்த’ படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படம் ஏற்கனவே தீபாவளி அன்று வெளியாகும் என தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ள நிலையில் அந்த தினத்தில் வெளியிட படக்குழுவினர் தீவிரமாக இரவு பகலாக பணி புரிந்து வருகின்றனர்.
இந்த நிலையில் ’அண்ணாத்த’ படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடித்துள்ள நடிகை மீனா, சற்று முன் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் ’அண்ணாத்த’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் விரைவில் வெளியாகும் என்று தெரிவித்துள்ளார். அதுமட்டுமின்றி ’அண்ணாத்த’ படத்தின் புகைப்படம் ஒன்றையும் அவர் வெளியிட்டுள்ள நிலையில் இந்த புகைப்படம் வைரலாகி வருகிறது.
ரஜினிகாந்த் மீனாவுடன் இந்த படத்தில் குஷ்பூ, கீர்த்தி சுரேஷ், நயன்தாரா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர் என்பதும், இந்த படத்தை சிறுத்தை சிவா இயக்கி உள்ளார் என்பதும், டி இமான் இசையமைத்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.








