இந்தியா
தேர்தல் முடிவுகளுக்கு பின், வெற்றி கொண்டாட்டங்களுக்கு தடை: தேர்தல் ஆணையம்

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற்ற நிலையில் அன்றைய தினம் பதிவான வாக்குகள் வரும் மே மாதம் இரண்டாம் தேதி எண்ணப்படுகின்றன. தேர்தல் வாக்கு எண்ணிக்கைக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயாராக இருப்பதாகவும் அதே நேரத்தில் தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் ஈடுபடும் ஊழியர்கள் கண்டிப்பாக மாஸ்க் அணிந்து தனிமனித இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும் என்றும் அது மட்டுமின்றி கொரோனா வைரஸ் தடுப்பூசி போட்டு இருக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையம் நிபந்தனை விதித்துள்ளது.
ஏற்கனவே நீதிமன்றம் தேர்தல் ஆணையத்திற்கு கடுமையான கண்டனம் தெரிவித்துள்ள நிலையில் தேர்தல் ஆணையம் தற்போது சுதாரித்து பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த வகையில் தற்போது வெளிவந்துள்ள தகவலின்படி தமிழகம், புதுவை, கேரளா, அசாம் மற்றும் மேற்கு வங்க மாநிலம் ஆகிய 5 மாநிலங்களில் நடைபெற்ற தேர்தல் முடிவுகளுக்குப் பின் வெற்றிகொண்டாட்டத்திற்கு அரசியல் கட்சியினருக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது.
மே இரண்டாம் தேதி 5 மாநில தேர்தல் முடிவுகள் வெளியாக உள்ள நிலையில் இந்திய தலைமை தேர்தல் அதிரடியாக இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. தேர்தல் ஆணையத்தின் உத்தரவை மீறி வெற்றி கொண்டாட்டத்தில் ஈடுபடும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை செய்யப்பட்டுள்ளது.




















