தமிழ்நாடு
தமிழகத்தை அடுத்து அண்டை மாநிலத்திலும் இன்று முதல் ஊரடங்கு! அதிரடி அறிவிப்பு

தமிழகத்தில் இன்று முதல் இரவு நேர ஊரடங்கு என்றும் ஞாயிறு மட்டும் முழு நேர ஊரடங்கு என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது என்பது தெரிந்ததே. இரவு நேர ஊரடங்கின் போது எந்தவிதமான வாகனப் போக்குவரத்துக்கும் அனுமதி இல்லை என்றும் பொதுமக்கள் வெளியே வரக்கூடாது என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் தமிழகத்தை அடுத்து தமிழகத்தின் அண்டை மாநிலமான தெலுங்கானாவிலும் இன்று முதல் ஏப்ரல் 30ஆம் தேதி வரை இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது.
தெலுங்கானா மாநிலத்தில் இரவு 9 மணியிலிருந்து காலை 5 மணி வரை ஊரடங்கு அமலில் இருக்கும் என அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. இருப்பினும் வெளி மாநிலங்களுக்கு செல்லும் பேருந்து போக்குவரத்தில் எந்தவித தடையும் இல்லை என தகவல் வெளிவந்துள்ளது.
தமிழகத்தை தொடர்ந்து தெலுங்கானாவிலும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழகத்தை போலவே தெலுங்கானாவிலும் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதை அடுத்தே அம்மாநில அரசு ஊரடங்கு நடவடிக்கையை எடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

















