இந்தியா
ரயில் பயணங்களில் இனி இந்த நேரத்தில் செல்போன், லேப்டாப் சார்ஜ் போடத் தடை!

இரவு நேரங்களில் ரயிலில் பயணம் செய்யும் போது செல்போன், லேப்டாப் சார்ஜ் செய்ய தடை விதித்து உத்தரவிடப்பட்டுள்ளது.
செல்போன் பயன்பாடு அதிகரித்த பிறகு ரயில்களில் செல்போன் சார்ஜ் செய்வதற்காக போர்ட்டுகள் வழங்கப்பட்டுள்ளன. அதை 24 மணி நேரமும் ரயில் பயணிகள் பயன்படுத்தி வருகின்றனர்.
சில நேரங்களில் சார்ஜ் போட்டுவிட்டு பயணிகள் தூங்கியும் விடுகின்றனர். அதனால் செல்போன், லேடாப் போன்றவை திருடு போவதாக அதிக புகார்கள் தொடர்ந்து வருகின்றன. சில நேரங்களில் செல்போன் வெடித்து தீ விபத்தும் ஏற்படுகிறது.
எனவே இரவு 11 மணி முதல் 5 மணி வரை ரயிலில் செல்போன் மற்றும் லேப்டாப் சார்ஜ் செய்யத் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த 6 மணி நேரத்திற்கு சார்ஜ் பிளக் பாயிண்ட்களின் மின் இணைப்பும் துண்டிக்கப்படும் என்று தெரிவித்துள்ளனர்.
இந்த தடை ஏற்கனவே மேற்கு ரயில்வேவில் அமலுக்கு வந்துள்ளது. விரைவில் பிற மண்டல ரயில்களிலும் இந்த தடை அமலுக்கு வரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


















