தொழில்நுட்பம்
அன்ரிசர்வுடு கம்பார்ட்மெண்ட் டிக்கெட்களை இப்படி புக் செய்லாம்.!

இனி வரிசையில் நிற்க தேவையில்லை, அன்ரிசர்வுடு கம்பார்ட்மெண்ட் டிக்கெட்களை இப்படி புக் செய்லாம். இந்திய ரெயில்வே துறை, புதிய மொபைல் செயலியை அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய மொபைல் செயலி வழி பயணம் செய்யும் பயணிகள் தங்களுக்கு தேவையான அன்ரிசர்வுடு டிக்கெட்களை புக்கிங் செய்து கொள்ள முடியும்.
யு.டி.எஸ் ஆன் மொபைல்(UTS on Mobile) என்று அழைக்கப்படும் இந்த செயலியை ரயில்வே துறை தற்பொழுது அறிமுகம் செய்துள்ளது.பயணிகள் அசல் டிக்கெட்டை டி.டி.ஆர் இடம் காண்பிக்க வேண்டிய அவசியமில்லை, அதற்கு பதிலாக யு.டி.எஸ் செயலியில் உள்ள “ஷோ டிக்கெட்(Show Ticket)” ஆப்ஷன் மூலம் டிக்கெட்டை காண்பிக்கலாம்.
இச்செயலி மூலம் சீசன் டிக்கெட்களை வாங்கிக்கொள்ளம், அல்லது இருக்கும் டிக்கெட் வேலிடிட்டியை புதிப்பித்து கொள்ளலாம். இத்துடன் இதில் நீங்கள் பிளட்பார்ம் டிக்கெட் பெறுவதற்கான வசதியும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த செயலி ஆண்ட்ராய்டு மற்றும் விண்டோஸ் இயங்குதளத்தில் இலவசமாக கிடைக்கிறது.




















