சினிமா செய்திகள்
விஜய்சேதுபதி, அஜித், பார்த்திபன் படங்களுக்கு தேசிய விருதூகள்!

தனுஷ் நடித்த ’அசுரன்’ திரைப்படத்திற்கு ஏற்கனவே இரண்டு விருதுகள் கிடைத்துள்ள நிலையில் தற்போது மேலும் ஒரு விருது கிடைத்துள்ளதாக வெளிவந்துள்ளது. ’அசுரன்’ படத்தில் சிறப்பாக நடித்த தனுஷ்க்கு சிறந்த நடிகர் தேசிய விருதும் வெற்றிமாறனுக்கு சிறந்த இயக்குனர் தேசிய விருதும் கிடைத்தது என்பதை சற்று முன் பார்த்தோம். தற்போது இந்த படம் தமிழில் சிறந்த படமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதனை அடுத்து மூன்றாவது விருது ’அசுரன்’ படத்திற்கு கிடைத்துள்ளது .
மேலும் அஜித் நடித்த விஸ்வாசம் திரைப்படத்தில் சிறப்பாக இசையமைத்த இசையமைப்பாளர் டி.இமானுக்கு சிறந்த இசையமைப்பாளர் விருது கிடைத்துள்ளது. அதேபோல் சூப்பர் டீலக்ஸ் படத்தில் சிறப்பாக நடித்த விஜய் சேதுபதிக்கு சிறந்த துணை நடிகர் விருது கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் பார்த்திபன் நடித்து இயக்கிய ஒத்த செருப்பு என்ற திரைப் படத்திற்கு 2 விருதுகள் கிடைத்துள்ளது. இதனை அடுத்து தமிழ் திரையுலகிற்கு இந்த முறை விருதுகள் குவிந்துள்ளது என்பது தமிழ் ரசிகர்களுக்கு கிடைத்த மகிழ்ச்சியான செய்தியாகும். தேசிய அளவில் தமிழ் திரைப்படங்கள் விருதுகளின் ஆக்கிரமிப்பில் இருப்பது தமிழ் திரை உலகிற்கு பெருமையாக ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.







