சினிமா செய்திகள்
விஷாலின் ’எனிமி’ படத்திற்கு சிக்கலா? வேண்டுமென்றே வதந்தி பரப்பும் மோசடி பேர்வழிகள்!

விஷால் நடித்து வரும் ’எனிமி’ படத்தின் வியாபாரத்தில் சிக்கல் என வேண்டுமென்றே ஒரு சிலர் வதந்தி பரப்பி வருவதாக விஷால் தரப்பினர் குற்றஞ்சாட்டியுள்ளனர்
விஷால் நடித்த ’சக்ரா’ என்ற திரைப்படம் சமீபத்தில் வெளியானது என்பதும் இந்த திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை என்பதும் தெரிந்ததே. இந்த நிலையில் விஷாலின் ’சக்ரா’ திரைப்படம் படுதோல்வியை அடைந்துள்ளதால் அவர் நடித்து வரும் அடுத்த படமான ’எனிமி’ படத்தின் வியாபாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக யூடியூபில் ஒரு சிலர் வேண்டுமென்றே வதந்தியை பரப்பி வருகின்றனர்
’எனிமி’ படத்தின் படப்பிடிப்பு இன்னும் முடியவில்லை என்பதும் இந்த படப்பிடிப்பு முடிந்த பின்னர்தான் வியாபாரத்தை பற்றிய பேச்சுவார்த்தையை தொடங்க இருப்பதாகவும் ஆனால் அதற்குள் வேண்டுமென்றே ’எனிமி’ படத்தின் வியாபாரம் குறித்து வதந்தியை ஒரு சிலர் பரப்பி வருவதாகவும் விஷால் தரப்பினர் குற்றம்சாட்டியுள்ளனர்
மேலும் விஷாலின் சக்ரா படத்தை பாசிட்டிவ்வாக விமர்சனம் செய்வதற்கு சம்பந்தப்பட்ட நபர்கள் பணம் கேட்டதாகவும் அந்த பணத்தை கொடுக்காததால் அவர்கள் வேண்டுமென்றே ’எனிமி’ பட வதந்தியை பரப்பி வருவதாகவும் கூறப்படுகிறது.




















